பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- இந்தியப் பண்பாட்டு நிலையம் 2.35 சொல்லுகிருேம். சமீப காலத்தில் தேசீயப் பள்ளிக்கட்டங்களையும் கல்லூரிகளையும் ஏற்படுத்த நாம் செய்த முயற்சிகள் எல்லாம் நமக்கு ஏதோ, புறத்தே ஒரு சுதந்திரம் வேண்டு மென்பதையே கருத்திற் கொண்டு செய்ததாகத் தெரிகிறது. நம்முடைய பண்பாட்டில், இயல்பாக உள்ள குறைபாடுதான் காப்பி’யடிக்கின்ற சறுக்குப் பாதையில் கம்மிை'கொண்டுசெலுத்தி விடுகிறது. அன்றியும், நம்முடைய சுதந்திரம் கேவலம் புறத்தே மட்டும் அமைவதாக இருப்பின், இதே கிலேமை அன்றும் நீடிக்கும். ஏனென்ருல், அந்த சுேதந்திரம் என்பது வெளிநாட்டு நிறுனங்களைப் பார்த்துப் பிரதி செய்யக் கூடிய சுதந்திரமாக அமைந்து, அதன் பயணுக நம்முடைய அதிருஷ்டம் இரண்டு தீய கோள்களின் சந்திப்பிலும், செல்வாக் கிலும் வளர நேரிடும். அந்த இரண்டு தீய கோள்கள் என்ன வென்றல், பிரதிசெய்தலும், பிரதிசெய்தலினல் உண்டாகின்ற தீமையு மாகும். இதன் பயனுக, யந்திரத்தில் செய்யப் பெற்றது போன்ற பல்கலைக் கழகங்களை, அதிலும் கெட்டுப்போன யந்திரத் தில் செய்யப்பட்டவை போன்ற பல்கலைக் கழகங்களை நாம் உண்டாக்குகிருேம். , ' , தோற்றுப் போன ஒரு கட்சியார்கள், தோல்விக்குக் காரணம் காட்டும் முறையில் கட்சிக்குள் உள்ள ஒவ்வொருவரையும் நீ ’ நான்’ என்று சொல்லிக் கொள்வது நாமறிந்ததே. இன்று எள்ளி நகையாடப்பெறும் கம்முடைய கல்வித் திட்டத்தில் கடட்டாளி களாகவுள்ள நாமும் அன்னிய காட்டாரும் இதே முறையில் ஒருவரை யொருவர் குறை கூறிக்கொண்டு திரிகிருேம். இதில் உண்மை என்ன வென்ருல், குற்றத்தை நம் இருவர் பேரிலும் சமமாகப் பங்கிட முடியும். என்ருலும், பொதுவாக கிகழ்ந்த தோல்விக்கு நம் ஒவ்வொருவருடைய பொறுப்பு எவ்வளவு என்று ஆராய்வது வெறும் பள்ளிக் கணக்கே தவிர வேறு பயன் விளக்காது என்றே நான் ங்ம்புகிறேன். இதைவிடப் பயனுள்ள காரியம் என்ன வென்ருல், தோல்விக்கு நம்முடைய பங்கு எவ்வளவு என்று ஆராய்வதே யாகும். இந்தச் சந்தர்ப்பத்தில் எதிர்க் கட்சியை ஓரளவு மறந்து விட்டிருக்கலாம். நம்மிடத்தில் கால்கள் இல்லை யென்று கற்பனை செய்துகொண்டு, அதற்கு ஈடு செய்யும் முறையில் வெளிநாட்டில் செய்யப்பெற்ற மரக் கால வைத்துக் கொண்டால்தான் நாம் முழுத் தன்மை அடைய முடியும் என்ற எண்ணம் நம்மைப் பிடித்து ஆட்டுவதே நம்முடைய பெருங் குறையாகும். ஆழமில்லாத 'தண்ணிரில்கூடத் திசைமாறி விட்டதாகக் கற்பனை செய்து a 16