பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்தியப் பண்பாட்டு நிலையம் 237 வேண்டுமென்று விரும்புவதால் நம்முடைய முயற்சிகள் பயனற்றுப் போய்விடுகின்றன. அல்லது அதனுல் கிடைக்கின்ற பயன் உண் மைப் பயனுக இல்லாமல் ஈடாக வுள்ள அல்லது மாற்ருக வுள்ள பயனுக அமைகிறது. மாற்ருக வுள்ள பயன் மூலத்தைப் போல் வடிவம், கிறம், உருவம் ஆகியவற்றைப் பெற்றிருந்தாலும், அந்தப் போலிப் பழத்தைக் கடிக்கவோ, விழுங்கவோ முடியாது. (§ வளர்ச்சி யடைந்த இந்தப் பல்கலைக் கழகங்களை எவ்வளவுதான் பெறவேண்டு மென்று நம்முடைய நாட்டார் விரும்பினுலும், அவை வேக வைக்கப்பட்ட முட்டைக ளாதலால் அவற்றிலிருந்து குஞ்சுகள் எவையும் கிடைக்கா தென்பதை மனத்தில் கொள்ள வேண்டும். நாம் மட்டுமல்லாமல், நம்முடைய ஐரோப்பிய ஆசிரியர்களுங் கூட அவர்களுடைய பல்கலைக் கழகங்கள் எந்த எந்த தேசத்தில் பிறந்தனவோ, அந்தத் தேசத்தின் இயல்பை யொட்டியே வளர்க் துள்ளன என்பதையும் அவற்றினுடைய லெளகீகச் சிறப்புக்கள் எல்லாம் அவற்றினுடைய பழைய வளர்ச்சியைப் பொறுத்தவை அல்ல என்பதையும் மறந்து விட்டதாகத் தெரிகிறது. அவர் களுடைய பல்கலைக் கழகங்களில் ஆதியில் கல்வி போதிக்கும் கடமையை மேற்கொண்டவர்கள் சமயச் சாமியார்கள் என்பதை யும், அவர்களிடம் கற்ற மாணுக்கர்களில் பெரும்பான்மையானவர் கள் மிகவும் ஏழைகளாக இருந்தார்கள் என்பதையும் இன்றைய ஆசிரியர்கள் மறக்கலாம். ஆனால், இன்றைய ஆசிரியர்கள், இந்தியாவைப்போன்ற வறுமை நிறைந்த ஒரு காட்டில் தேவைக் கதிகமான அளவுக்குப் பல்கலைக் கழகத்தில் லெளகீகப் பகுதிகளைப் பெரிது படுத்தக் கூடா தென்பதை மறக்கக்கூடாது. மேலும், வசதிக் குறைவுடைய நம்முடைய பள்ளிக்கூடங்களும், கல்லூரி களும் தேவைகளைக் குறைத்துக்கொண்டு மேஜைகளையும், நாற்காலிகளையும் அதிகப்படுத்த வேண்டு மென்று அந்த ஆசிரியர் கள் கினைக்கும்பொழுது நம்முடைய மக்களின் நிலைமை மிகவும் ஆபத்தானதாகிவிடுகிறது. மனிதனுக்கு உணவும், പങ്ങ് வைத்துச் சாப்பிட வேண்டிய பாத்திரங்களும் தேவை யென்பதை நான் அறிகிறேன். ஆளுல், உணவு நெருக்கடி ஏற்படும்பொழுது பாத்திரங்களில் சிக்கனம் தேவை யென்பது மிக மிக அதிகமாக வலியுறுத்தப்பெற வேண்டும். கல்விக்குரிய கருவிகளை மிகவும் விலை யுயர்ந்ததாகச் செய்வதனல் 3.ທມມໍ பெறுவதே கடினமாக ஆக்கப்படும்பொழுது, அது,