பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242 அனைத்துலக மனிதனை நோக்கி வழிகளாகவும், மாற்ற முடியாத முறைகளாகவும், சுவை பற்ற கற் பிக்கும் முறைகளாகவும் அவை அமைந்துள்ளன. கம்முடைய துரதிர்ஷ்டவசமாக, ஐரோப்பியப் பல்கலைக் கழகங் களில் கிடைக்கின்ற எல்லாத் தட்டுமுட்டுச் சாமான்களையும், உயிருள்ள ஆசிரியர்களேத் தவிர, நாம் பெற்றுள்ளோம். புத்தகக் கடையிலுள்ள புத்தகங்கள் அனைத்திலும் சொல்லப்பெற்றுள்ள வற்றை ஏடுகளுக்குப் பதிலாக வாயில்ை பேசுகின்ற புத்தகப் பூச்சிகளே கிரம்பப் பெற்றிருக்கிருேம். ஆகவேதான் நம்முடைய பேராசிரியர்கள்கடடத் தங்களுடைய மாணவர்களைத் தீண்டத் தகாதவர்களாக ’க் கருதுகிருர்கள். இந்த ஆசிரியர்கள் வேண்டா வெறுப்புடன் மிக நீண்ட தூரத்திலிருந்து கொண்டு, தங்களையும், மாளுக்கர்களையும் பிரிப்பதற்கு கோட்டுப் புத்தகங்கள் என்ற குறுக்குச் சுவர்களைக் கட்டிக்கொண்டு, மனத்திற்குக் கொடுக்க வேண்டிய உணவைப் பங்கிட்டு வழங்குகிருர்கள். இத்தகைய உணவு விரும்பி உண்ணப்படுவதுமில்லை ; போதுமான அளவு உயிர்ச் சத்தையும் அது தருவதில்லை. இது பஞ்ச காலத்தில் அளிக்கப்பெறும் படியாகும். இவ்வாறு அளவு முறையோடு தரப்படு கின்ற இந்த உணவு நம்மை மரணத்திலிருந்து பாதுகாக்குமே தவிர, மனிதனுடைய தேவைக் கப்பாற்பட்டுக் காணப்படுகின்ற நல்ல பண்பாடு என்பதை காம் பெறமுடியாத கிலேயில் வைத்திருக் கிறது. இது தேவைக்கே மிகவும் குறைவாக இருத்தலின் எக் காரணத்தைக்கொண்டும் இதனை ஒரு விருந்து என்று சொல்வ தற்கே யில்லை. - இந்த உலகம் நம்மை காடி நிற்கின்றது என்றும், நாம் இல் லாமல் இந்த உலகம் கிற்க முடியா தென்றும் என்றைக்கு நாம் நிரூபிக்கிருேமோ, திருப்பிக் கொடுக்க முடியாத பிச்சைக்காரர்கள் அல்லர் காம் என்பதை என்று நிரூபிக்கிருேமோ, அன்றுவரைப் பிறருடைய தயவைக் கெஞ்சி நாடிக்கொண்டிருக்க வேண்டிய கிலேயில்தான் காம் இருக்கவேண்டும். ஒப்பாரி வைத்தல். புகழ் பாடல், சட்ட முறைக்கு அப்பாற்படாது வாலேக் குழைத்தல் ஆகிய முறைகள் மூலமாகத்தான் இவற்றைப் பெற முடியும். உலகம் பிார்த்து மரியாதையோடு ஏற்றுக் கொள்ளக்கூடிய எதனையும் நாம் தர முடியா திருக்கின்ற வரையில் நம்மைப்பற்றி யாரும் கவலைப்பட மாட்டார்கள். இதற்கு யாரைக் குறை கடறுவது? பூமியில் பல பகுதி தரிசாகக் கிடங்துங்கட்ட, அதில் ஒன்றையும் உற்பத்தி செய்ய வேண்டுமென்று நினைக்காமல் சோம்பலுடன்