பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்தியப் பண்பாட்டு நிலையம் 243 விாழ்கின்ற மக்களே என்ன வென்று சொல்வது? காடு முழுவதையும் சக்தி யில்லாத மனிதர்களே வைத்துக் காப்பாற்றுகின்ற அநாதை இல்லங்களாகச் செய்ய முடியுமா? ஏனென்ருல், கம்மிடத்தில் கொடுக்கப்பட்டிருக்கிற ஒரே காரணத்தால் ஒரு பொருளே நம் முடையதாக முற்றிலும் ஆக்கிக்கொள்ள முடியாதென்ற கடின மான உண்மையை நாம் மனத்தில் பதித்துக்கொள்ள வேண்டும். ஆகாயத்திலிருந்து மேகம் பொழிகின்ற நீரைப் பெற்ற ஓர் ஏரிதான் உயிர்களைக் காப்பாற்ற முடியுமே தவிர, பாலைவனம் அவ் வாறு செய்ய முடியாது. ஏனென்ருல், ஏரியின் ஆழத்தில், பெற்றுக் கொள்வதும் கொடுத்தலும் ஒரே கிலேயை அடைந்துவிட்டன. யாரிடத்தில் ஏற்கெனவே இருக்கின்றதோ, அவனுக்கே மறுபடியும் கொடுக்கப்படுகின்றது. அவ்வாறு இல்லையானல் கொடுக்கப் பெற்ற பொருளும், அதனைப் பெற்றுக்கொள்பவனும் அவமானப்படுத்தப் படுகிருர்கள். V தேசீய மண்ணில் தோன்றி வளர்ந்த ஒரு பல்கலைக் கழகம், அதனுடைய வரலாற்றில் நிகழ்ந்த ஒரு திருப்பத்தால் எவ்வாறு தோல்வியுற்றது என்பதை ஓர் உதாரணத்தின் மூலம் காட்டுகிறேன் - ஐரோப்பாவின் இருண்ட காலத்தில் காட்டுமிராண்டிகளின் தாக்குதலினுல் ரோமாபுரி வீழ்ச்சி யடைந்தபொழுது, மேளுடுகளி லேயே, அயர்லாந்து தேசம் ஒன்று மட்டும்தான் தன்னுடைய மரபை யும், பண்பாட்டையும் காப்பாற்றி வந்தது. ஐரோப்பாவின் பல் வேறு பகுதிகளிலிருந்த மாளுக்கர்கள் அங்கே கல்வி கற்க வந்தார். கள். நம்முடைய சம்ஸ்கிருதப் பாடசாலைகளைப் போல அவர் களுக்கு உண்டி, உறையுள், புத்தகங்கள் ஆகிய அனைத்தும் இலவசமாக வழங்கப்பெற்றன. அயர்லாந்து தேசத்திய சாமியார் கள் கிறிஸ்துவ சமுதாயம், பண்பாடு ஆகியவற்றைப் பற்றி அனேந்து கிடந்த ஒளியை ஐரோப்பா முழுவதிலும் மறுபடியும் தூண்டிவிட்டார்கள். பாரிஸ் பல்கலைக் கழகத்தைத் தோற்றுவிப் பதற்கு கிளமன்ஸ் என்ற ஐரீஷ்காரரின் உதவியைத்தான் ஷார்லமேன் நாடினர். ஐரீஷ் பண்பாடு அன்று அடைந்திருந்த பெருமைகளே எடுத்துக்காட்டப் பல்வேறு உதாரணங்கள் உண்டு. இந்தப் பண்பாடு ஆதியில் ரோமாபுரியில் தோன்றினுலும் மிக நீண்ட காலமாக ரோமாபுரியோடு தொடர் பில்லாமல் வளர்ந்த காரணத் தால் ஐரீஷ் மக்களினுடைய மனப்பாங்கு, வாழ்வு ஆகியவற்ருேடு,