பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

246 அனைத்துலக மனிதனை நோக்கி அன்றியும், மன வளர்ச்சி அறிவு வளர்ச்சியோடு இல்லாமல், முழு மொழியையும்கூடக் கடல் கடந்து இங்கே இறக்குமதி செய்ய வேண்டு மென்று நினைப்பதாகத் தெரிகிறது. ஆகையினுல்தான் இங்கு காம் பெறுகின்ற கல்வி ஒரு வடிவ மற்றதாய், மிக நீண்ட தூரத்தி லுள்ளதாய், உருவ மற்றதாய், வாழ்வோடு ஒரு சிறிதும் தொடர்பு இல்லாததாய், சமயங்களில் எல்லே மீறிய செலவு வைப்ப தாய், கம்முடைய உடலேயும், வசதிகளையும் கொடுப்பதாய் இருப்பு தோடுகட்ட, முடிவில் பயனிலும் மிக அற்பமானதாக இருக்கிறது. கல்வி போதிப்பதில் நாம் பெற்றுள்ள அனுபவத்தைக் கொண்டு பார்க்கும்பொழுது மாணுக்கர்களில் பெரும்பான்மையானவர்கள் மொழியைக் கற்றுக்கொள்வதில் அவ்வளவு கல்ல சக்தி பெறவில்லை யென்றே அறிகிறேன். ஆங்கில மொழியை அரை குறையாகத் தெரிந்து கொண்டுள்ள அளவில் மெட்ரிகுலேஷன் தேர்ச்சி பெறுவதே மிகக் கடினமான வேலையாக இருக்கிறது; அதைவிட உயர்ந்த படிகளில் ஆபத்து நிச்சயம். இந்தியாவிலுள்ள பெரும்பான் மையான பிள்ளைகளால் ஆங்கில மொழியை நன்கு பயில முடியாத தற்குப் பல்வேறு காரணங்கள் உண்டு. முதலாவதாகக் கீழை நாட்டு மொழிகளுள் ஒன்றின் மூலமாகவே சிந்தனை செய்யும் அவர் கள் தங்களுடைய மனத்தில் இந்தப் புது மொழியைப் புகுத்துவது என்பது ஆங்கில உடைவாளைத் துருக்கியர்களுடைய வாளைப் போடும் உறைக்குள் செலுத்த முயல்வது போன்றதாகும். அன்றி யும் தக்க தகுதி யுள்ள ஆசியர்களிடத்தில் தகுந்த முறையில் ஆங்கில மொழியில் பயிற்சி பெறுவது என்பது பல பிள்ளைகளின் பொருளாதாரத்திற்கு அப்பாற்பட்டதாகும். ஏழைப் பிள்ளைகள் நிச்சயமாக அதனைப் பெற முடியாது. அதற்கு மறுப்பாகவுள்ள விவாதம் என்ன வென்பதையும் கான் அறிவேன். ' உயர்தரக் கல்வி இந்திய மொழிகளின் மூலமாகப் போதிக்கப்பெற வேண்டு மென்று நீங்கள் விரும்புகிறீர்கள் அப்படி யானுல் அதற்குரிய பாடப் புத்தகங்கள் எங்கே?' என்பதே அக்த விஞ. இந்திய மொழிகளில் இதனைப் போதிப்பதற்குரிய பாடப் புத்தகங்கள் ஒன்றும் இல்லை 6ב:gr:rt :ל: דגד מ:תr அறிவேன். ஆகுரல் உயர்தரக் கல்வியை நம்முடைய சொந்த மொழிகளின் மூலமாகக் கொடுக்கத் தொடங்கிகு லொழிய, பாடப் புத்தகங்கள் எவ்வாறு வரமுடியும் ? அச்சடிக்கப்படுகின்ற நாணயங்களுக்குச் செலவாணி இல்லை யென்ருல், நாணய சாலையில் மேலும் மேலும் நாணயங்களே உற்பத்திபண்ணிக் கொண்டிருக்க மாட்டார்கள். .