பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

248 - அனைத்துலக மனிதனே நோக்கி இந்தப் பல்கலைக் கழகத்தை நம் உள்ளத்தி னுள்ளே இருக்கும் உண்மையை அடிப்படையாகக் கொண்டு நாமே தோற்றுவிக்க முடியும். - ஒரு பல்கலைக் கழகத்தின் மிக முக்கியமான நோக்கம் என்ன வென்ருல், நாட்டிலுள்ள அறிவாற்றல்களே பெல்லாம் ஓர் இடத்தில் . - ؟ .... )Q یہ , , , ـہ . . . . . 's Tر - پٹی مہیہی اrs م کے , x + یہ مہر ،.مِ ، ٹی ද, குவியுமாறுச் செயவதே யாகும. ஏனெனருல அவவாறு குவிவது தான் உயிரோடு இருக்கின்ற உயிர் அணுக்களின் கூட்டத்தைப் போன்றதாகும். அதுவே தேசீய மனத்தின் உயிர்த் தத்துவத்தின் ஆக்கத்திற்கு கிலேக்களஞகும். - . VIII இந்தியா முழுவதிலும் அறிவுத் துறையில் ஒர் ஒற்றுமையை ஏற்படுத்துவது மிகக் கடினமான தென்றும், ஏறத்தாழ முடியா தென்றும் பேசப்பெறுகிறது. இதன் காரணமாக இந்தியாவிலுள்ள பல் வேறு மொழிகளையும் எடுத்துக் காட்டுகிருர்கள். என்ருலும், உலகத்திலுள்ள ஒவ்வொரு தேசமும் தன்னுடைய பிரச்னகளுக்குத் தானேதான் தீர்வு காண வேண்டும். இன்றேல் தோல்வியை ஒப்புக் கொண்டு அழிய நேரிடும். உண்மையான எல்லா நாகரிகங்களும் இடையூறுகள் என்ற வலிமையான பாறை யின் மேலேயே கட்டப்பெற்றுள்ளன. தேவையான தண்ணிரைக் கொடுக்கக்கூடிய ஆற்றைப் பெற்றுள்ளவர்களைப் பார்த்து நாம் பொருமைப்படலாம். ஆனல் ஆறு இல்லாதவர்கள் கிணறு தோண்டி பூமியின் ஆழத்தில் தண்ணிரைப் பெற முயல வேண்டும். அதே நேரத்தில், மிக எளிதாகக் கிடைக்கின்ற காரணத்தால் புழுதி யையே தண்ணிருக்குப் பதிலாகப் பயன்படுத்தலாம் என்று மட்டும் கினைக்கக்கூடாது. வேறுபட்ட பல்வேறு மொழிகளும் இருப்பதைத் தைரியத்தோடு நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். ஆளுல், அதே நேரத்தில், வெளிநாட்டு மொழி என்பது புறத்தே யிருந்து கொண்டு வரப்படுகின்ற மண்ணேப் போல் ஒரு சிறிய தொட்டியில் போட்டுப் பயிர் செய்வதற்குப் பயன்படுமே தவிர வாழ்வுக்குத் தேவையான - பயிர்ச் செலவு செய்வதற்கு ஒருக்காலும் பயன்படாது. ஐரோப்பாவிலுள்ள ஒரே மொழியைக் கொண்ட ஒரு நாட்டைப் போல அல்லாமல், பல்வேறு மொழிகளையும், பல்வேறு மக்களையும் கொண்ட ஐரோப்பா தேசம் போன்றதாகும் இந்தியா தேசம் என் பதை ஒப்புக்கொள்வோமாக. என்ருலும்கூட, அறிவுத் துறையில் ஏற்பட்ட ஒற்றுமையோடு கட்டிய ஒரு பொது நாகரிகத்தை