பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 முன்னுரை நடுவே அமைந்திராமல், வீடுகள் பலவும் ஒன்ருக ஓர் இடத்திலும், அவர்களின் கிலங்கள் பல்வேறு இடங்களில் சிதறியும் இருக்கும். இந்தியக் கிராம சமுதாயம் என்பது ஐரோப்பிய கிராமத்தை விடப் பெரிதாகவும், செறிவுடையதாகவும், நெருக்கமுடையதாகவும் இருக்கும். காலாயிரம் அல்லது ஐயாயிரம் மக்கள் தொகையுடைய கிராமங்கள் கிரம்ப உண்டு. பத்தாயிரம் மக்கள் தொகையுடைய கிராமங்களும் சில உண்டு. வடக்கிலும், வடமேற்கிலும் உள்ள கிராமங்களில் சில ஒரு கோட்டைக்குள் அமைந்துள்ளன. சிறு நகர் என்று கூறக்கூடிய முறையில் அவை உள்ளன. கைத் தொழிலேயும், வேளாண்மையையும் ஒன்று கலந்தமையாலும் மக்கள் தொகை மிகுதியாக இருந்த காரணத்தாலும், நவீன காலம் வரை, இந்தியக் கிராமம் சுயதேவைப் பூர்த்தி செய்துகொள்வதாய், திருப்தியுடன் வாழும் சமுதாயத்தைப் பெற்றதாய் அமைந்து கிடந்தது. . . புராதன இந்தியாவின் கிராமங்களிடம் எவ்வளவு மதிப்பு வைத் . திருந்தபோதிலும், கால மாறுபாடு, கிராமப் பொருளாதாரத்தைக் குலத்துவிட்டது என்பதையும், அவை பழைய வடிவில் நிலத்து நிற்க முடியாது என்பதையும் தாகடர் உணர்ந்தார். கிராமப் *. பொருளாதாரத்தையும், எளிய தொழில் முறையையும் ஐரோப்பா வின் தொழிற் புரட்சி அழித்துவிட்டது. இயந்திர உபயோகம் உற் பத்தியை அதிகப்படுத்தி, விலைபோவதற்கேற்ற சந்தையையும் விரும்பிற்று. நாகரிக உலகத்தில் நாம் பின்தங்கி விடாமல், உடன் செல்ல வேண்டுமானுல், காலத்தோடு ஒட்டி நாமும் புதிய இயந்திர சாதன முறைகளைக் கைக்கொள்ள வேண்டும் எனத் தாக்டர் விரும்பினுர். - பழமையை விடாப் பிடியாகப் பிடித்துக் கொள்பவரல்லர் தாகூர். ஆகவே, இந்தியப் பொருளாதாரத்தில் இயந்திரம் நுழை வதை அவர் வரவேற்ருள். கால மாறுபாட்டாற் பயனற்றுப் போன வழிகளை விடாப் பிடியாகப் பிடித்திருப்பதால், இந்தியாவுக்கு கற் பயன் விளக்க முடியாது என அவர் பலமுறை கடறியுள்ளார். கைத்தொழிலின் சிறப்பை அவர் நன்கு அறிந்திருந்தார். மிக அழகிய கலப்பொருள்கள் சிலவற்றை, சாமர்த்தியத்துடன் செய் யப்படும் உடல் உழைப்பில் தான் பெறமுடியும் எனவும் அவர் கடறியுள்ளார். அதே நேரத்தில் நம்முடைய மக்கள் அனைவருக்கும் தேவையான பொருள்களைப் பெறவேண்டுமானல், இயந்திரங்களே அதிகம் பயன்படுத்த வேண்டும் என்பதையும் அவர் அறிந்திருக்