பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்தியப் பண்பாட்டு நிலையம் 257・ ப்டிப்பாகவே நின்றுவிட்டது. அந்தக் கல்வி,பல்வேறு வகைகளில் பயன்படக்கூடிய நெருப்புப் பெட்டியாக இருக்கின்றதே தவிர, உயிர்த் தத்துவமும், அழகும், பயனும் ஒன்ருகக் கலந்துள்ள கால ஒளியாக ஒருநாளும் இருக்க முடியவில்லை. இதே காரணத் தினுல்தான் இந்தியாவிலேயே பல கிலேயங்களேத் தோற்றுவிக்க வேண்டு மென்றும், அக்த கிலேயங்களில் இந்தியாவின் அறி வாற்றல் முழுவதும் ஆக்க வேலைக்கு ஒன்றுக.ட வேண்டு மென்றும் கீழ்நாடு-மேனடு ஆகியவற்றிலுள்ள அறிவு ஆதாரங்கள், சிந்தனை ஆதாரங்கள் அனைத்தும் ஒன்று கலந்த முறையில் இங்கே குவிய வேண்டு மென்றும் இந்தியாவின் அந்தராத்மா கூவி அழைக்கிறது. பழங்காலத்திய பிரம்மவிருத்தம், ஜனகன் காலத்திய மிதிலே, விக்கிரம்ாதித்தன் காலத்திய உஜ்ஜயினி” ஆகியவற்றை நவீன முறையில் அமைக்கவேண்டு மென்று இந்தியா விரும்புகிறது. தன் னுடைய மனத்தைத் தானே தெரிந்துகொண்டு, அதனை உலகம் முழுவதற்கும் வழங்குகின்ற சக்தர்ப்பத்தை இந்த நாடு எதிபார்க் கிறது. அப்போதுதான் பிரிந்து கிடக்கின்ற ஆற்றலால் ஏற்படும் குழப்பத்திலிருந்து விடுபட்டுக் கடன் வாங்கிய சக்தியால் வலுவிழக் காமல் இருக்க முடியும். XIII ஒரு பண்பாடு வெளி நாட்டில் தோன்றியது என்பதற்காக, அதில் நாம் கம்பிக்கை இழக்கவில்லை யென்பதை மிகத் தெளிவாக இங்கே சொல்லிவிட விரும்புகிறேன். அதற் கெதிராக, வெளியிலிருந்து வருகின்ற சக்திகள் கொடுக்கின்ற அதிர்ச்சியின் மூலந்தான் நம்முடைய அறிவுச் சக்தியை நிலைபெறச் செய்ய முடியும். கிறிஸ்துவச் சமயத்தின் தத்துவம் முழுவதும், ஐரோப் பாவின் பழைய பண்பாட்டிற்கும், ஐரோப்பியர்களுடைய குண கிலைகளுக்கும் எதிராகவே அமைந்துள்ளன என்பதை ஏற்றுக் கொள்ளவேண்டும். என்ருலுங்கூட, ஐரோப்பாவின் இயல்பான எண்ணங்களுக்கு எதிராகச் சொல்லப் பெறுகின்ற இந்த இயககம் தான் ஐரோப்பாவின் காகரிகத்தை வலுப்படுத்தவும், வளப்படுத்த வும் முக்கியமான காரணமாக இருந்தது. உண்மையைக் கூறு மிடத்து, எந்தத் திசையிலிருந்து எதிர்ப்புத் தோன்றியதோ, அந்தத் திசையிலேயே அது மிகவும் வலுவடைந்தது. பிற நாட்டில் தோன்றி யதாகிய இந்தக் கிறிஸ்துவச் சமயக் கொள்கைகளால்தான், அதா வது அந்தக் கொள்கையின் கீழை காட்டுவடிவம், உணர்ச்சி ஆகிய வற்ருல்தான். ஐரோப்பிய மொழிகள் முதன் முதலில் விழிப்படைந்து