பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

258 அன்த்துலக மனிதனை நோக்கி பயனுள்ள தெம்பைப் பெற்றன. இதே சம்பவந்தான் இந்தியர் விலும் நிகழ்ந்துகொண் டிருக்கிறது. ஐரோப்பியப் பண்பாடு, தன் னுடைய அறிவை மட்டும் நம்மிடம் கொண்டு வராமல், அதனுடைய வேகத்தையும் நம்மிடம் கொண்டுவந்து விட்டிது. அந்தப் பண் பாட்டை நாம் ஏற்றுக்கொண்டு ஜீரணம் செய்வது நல்ல முறையில் அமையாவிட்டாலும், அதன் பயனுகப் பிழைகள் பல நேர்ந்தாலும், அது நம்முடைய பழகிப்போன பழக்க வழக்கங்களிலிருந்து கம் - .அறிவு வாழ்க்கையை விடுவிக்கப் பயன்பட்டது لtLسLلاك 5 صري) நம்முடைய மரபுக்கு விரோதமாக அது தருகின்ற செய்திகள், ! நம்முடைய மனச்சான்றை ஒளி பெறச் செய்கின்றன. பிற நாட்டுப் படிப்பானது நம்முடைய தேசீய மனத்தை முழுதும் கொள்ளே கொண்டு, உண்மையின் அமைப்புகளைக் கண்டு புதிய எண்ணங்களே நாம் பெற முடியாமல் செய்து விடுகின்ற இந்தச் செயற்கை அமைப்புச் சூழ்கிலேயைத்தான் எதிர்க் கிறேன். இதன் காரணமாகத்தான் நம் பண்பாட்டிலுள்ள எல்லா உறுப்புக்களையும் வலுப்படுத்தவேண்டு மென்று நான் கூறுகிறேன். மேல்நாட்டுப் பண்பாட்டை எதிர்த்துப்போராடாமல் அதனே ஏற்றுக் கொண்டு ஜீரணிக்கவேண்டு மென்று சொல்லுகிறேன். அது நமக்கு ஊட்டமாக வரவேண்டுமே தவிர, பாரமாக வரக் கட்டாது. அந்தப் பண்பாட்டைப் பெற்றுக்கொண்டு, காம் தலைவர்களாக இருக்க வேண்டுமே தவிர, வெறும் ஏட்டுக் கல்வியையும் புத்தகப் படிப்பையும் ஏற்கின்ற பாரம் தாங்கிகளாக ஆகி விடக் கட்டாது. XIV இந்தியப் பண்பாட்டின் முக்கியமான ஆறு நான்கு கிளே களாகப் பாய்ந்தது. வேத பெளராணிக*, பெளத்த, ஜைனக் கிளேகளாகும் அவை. இந்திய மனச்சான்று என்ற உயரமான இடத்திலிருந்து இந்த முக்கியமான ஆறு தொடங்கியது. - ஒரு காட்டிற்குரிய ஆறு, அந்த நாட்டிலுள்ள தண்ணீரை மட்டும் பெறுவதில்லை. திபெத்தில் தோன்றுகின்ற பிரம்மபுத்திரா, இந்தியாவில் தோன்றுகின்ற கங்கையோடு கலக்கின்றது. அதே - போல, இந்தியாவின் மூலப் பண்பாட்டிற்கும் இத்தகைய உப கதிகள் சேர்ந்துள்ளன. உதாரணமாக, முஸ்லீம்கள் வெளி நாட் டிலிருந்து புலமுறை இந்தியாவிற்குள் வந்து தங்களுடைய அறிவுக் களஞ்சியத்தையும், ஆச்சரியப்படும்படியான சமய ஜனநாயகத்