பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்தியப் பண்பாட்டு நிலயம் 25.9 - தையும் கொண்டு வந்து சேர்த்து, இந்த ஆற்றை வெள்ளம் பெருக் கெடுத்தோடச் செய்தார்கள். நம்முடைய இசை, கட்டடக் கலை, ஓவியக் கலை, இலக்கியம் ஆகிய அனைத்திற்கும் முஸ்லீம்கள் தங்களுடைய கிலேயான உயர்ந்த தானங்களைச் செய்துள்ளார்கள். இடைக் காலத்தில் கம்முடைய நாட்டில் வாழ்ந்த ஞானிகளுடைய வரலாற்றையும்.நூல்களையும் கற்கின்றவர்களும், முஸ்லீம்கள் நம்முடைய நாட்டை ஆண்ட காலத்தில் இங்குத் தோன்றிய சமய இயக்கங்களே அறிந்தவர்களும் மட்டுமே வெளி நாட்டிலிருந்து வந்த இந்த வெள்ளம் கம்முடைய வாழ்க்கையோடு எந்த அளவுக்கு இரண்டறக் கலந்துள்ளது என்பதையும், எவ்வளவு தீவிரமான முறையில் நாம் இவர்களுக்குக் கடன்பட்டுள்ளோம் என்பதையும் அறிந்துகொள்ள முடியும். - - இதனை யடுத்து, மேலே காட்டுப் பண்பாடாகிய பெரு வெள்ளம் புகுந்து எல்லாக் கரைகக்ாயும், அடைப்புகளையும் உடைத்துக் கொண்டு, மற்ற எல்லா ஆறுகளேயும்கட்ட அதனுடைய வேகத் தினுல் ஒன்ருக்கி விட்டது. இந்த வெள்ளம் ஓடிச் செல்வதற்குரிய ஒரு கால்வ்ாயை உண்டாக்கின லொழிய நம்மை மூழ்கடித்து விடக்ககூடிய இந்த வெள்ளத்திலிருந்து தப்பித்தல் என்பது முடியாத காரியம். - - பல்வேறு வகைப்பட்ட இந்தப் பண்பாடுகளே யெல்லாம், அதாவது வேத, பெளராணிக, பெளத்த, ஜைன, இஸ்லாமிய, சீக்கிய, சொரேஸ்டானியப் பண்பாடுகளே யெல்லாம் ஒற்றுமைப் படுத்திப் படிப்பதற்குரிய வாய்ப்பை கம்முடைய இந்தியக் கல்வி கிலேயத்தில் உண்டாக்க வேண்டும். இவைகளே யடுத்துக் கூடவே, ஐரோப்பியப் பண்பாடுகளையும் கற்ருல்தான் இவற்றை ஜீரணிக்க முடியும். கரைக்குள் அடங்கி ஓடுகின்ற ஆறு உண்மையி லேயே நம்முடையதுதான். ஆல்ை, வெள்ளம் வரும்பொழுது நமக்கும் ஆற்றுக்கும் உள்ள தொடர்பு ஆபத்துக்களால் கிறைந்துள்ள தென்பதை மறக்கக் கூடாது. பழங்காலச் செல்வ மாகிய ஞானக் களஞ்சியங்களைப் பெற்றுள்ள நம்முடைய மொழி களைக் கற்பதோடு, நவீன இந்தியாவின் பண்பாடுகளைத் தாங்கி கிற்கும் எல்லா மொழிகளேயும் கற்றே தீர வேண்டு மென்று சொல்லத் தேவையில்லே. இன்று உயிரோடு வாழும் இம் மொழிகளே அல்லாமல் நாடோடி இலக்கியத்தையும் கற்க வேண்டும். அந்த நாடோடி இலக்கியந்தான் நம்முடைய மக்களின் மனோதத்துவத்தை நாம் அறியுமாறு செய்து, நம்முடைய நாட்டு மக்களின் புறத்தே