பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்தியப் பண்பாட்டு நிலையம் 263 அனத்தையும் ஒன்று சேர்க்க வேண்டியது முக்கிய மென்ற முடிவுக்கு வந்துள்ளேன். நம்முடைய மனத்தைப் பொறுத்தவரை, அதனே கிலேபெறச் செய்வதற்குத் தேவையான பல உறுப்புக்களில் ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் நவீனக் கல்வி பெற்றுள்ள தென்பதைக் கண்டு பிடித்தேன். அந்த ஒரு பகுதிகூடப் புதியதாக இல்லாமல் காயவைத்துத் தகர டப்பாக்களில் அடைக்கப் பெற்ற பொருளாகவும் இருக்கக் கண்டேன். சீரான உணவுக்குப் (சமன் செய்த உணவு) பல்வேறு பொருள்களும் கலந்த ஓர் உணவு வேண்டும். இந்தப் பொருள்கள்கூடப் பரிசோதனை சாலையில் தயாரிக்கப்படாமல், காயவைத்து டப்பாக்களில் அடைக்கப்படாமல் வளர்ச்சியடைகின்ற நம்முடைய உறுப்புக்களைப் போல உயிருள்ள, வளர்கின்ற பொருள்களாக இருக்க வேண்டும். - நம்முடைய லெளகீக வறுமையைக்கூடத் தனிப்பட்ட சக்தி களே ஒன்று சேர்த்துக் கூட்டுறவு முறையில் முயல்வதன் மூலந்தான் போக்க முடியும். ஆகவே இந்த நிறுவனங்கள்கட்டப் பொருளாதாரக் கூட்டுறவு முறையில்தான் அமைக்கப்பெற வேண்டும். அது வெறும் ஆசிரியப் பணியை மட்டும் புரியாமல் வாழ்ந்து காட்டுவதாய், வெறும் சிங்தனு சக்தியோடு கின்று விடாத தாய் அமைய வேண்டும். ஒரு காலத்தில் இயல்பாக நமக்கு அமைக் துள்ள பல்கலைக் கழகங்களாகிய தபோவனங்கள் வாழ்க்கையி லிருந்து பிரிந்து கிற்கவில்லை. அங்கு ஆசிரியர்களும் மாணவர் களும் முழு வாழ்வையும் கழித்தார்கள். அங்கே, அவர்கள் பழங் களையும் விறகுகளையும் சேகரித்ததோடு, ஆடு மாடுகளையும் புல் மேய ஒட்டிச் சென்ருர்கள். மாணவர்கள் பெற்ற ஆன்மீகக் கல்வி, அவர்கள் வாழ்ந்து காட்டிய ஆன்மீக வாழ்வோடு தொடர்புடைய தாகவே இருந்தது. - நாம் நிறுவப்போகும் பண்பாட்டு நிலையம் இந்தியாவின் அறிவு வாழ்க்கையின் மையமாக இருப்பதோடுகூட, அதன் பொருளாதார - -- வாழ்கன்கயின் மையமாகவும் இருக்க வேண்டும். கிலத்தைப் பயிரிடுதல், மாடுகளை வளர்த்தல் ஆகியவற்றைச் செய்து, தன்னை யும் மாணவர்களையும் பீடித்திருக்கும் பசிப் பிணியைப் போக்குல தோடு, சிறந்த மூலப் பொருள்களே உபயோகப்படுத்தி, விஞ்ஞானத் தின் உதவி கொண்டு சிறந்த பொருள்களைத் தயாரித்துத் தேவை களை யெல்லாம் பூர்த்தி செய்துகொள்ள வேண்டும். கூட்டுறவு முறையில் அந்த நிலையம் மேற்கொள்ளும் தொழில் முயற்சிகளைப் பொறுத்தே கிலேயத்தின் வாழ்வும் வெற்றியும் அமையும். இந்தக்