பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11. கல்வியின் பேதமின்மை இன்றுள்ள உலகம் ஐரோப்பியர்கட்குச் சொந்தமா யுள்ளது என்பதை அனைவரும் ஒப்புக் கொள்வர். அதுதான் அவர்களுடைய கறவைப் ப்சு ; அவர்களுடைய பாத்திரம் கிரம்பி வழியும் முறையில் அது கறக்கிறது. கீழை நாடுகளில் உள்ள நாம் அச்சத்தால் வாய் பிளந்து பார்த்துக் கொண்டிருப்பது தவிர வேறு ஒன்றுஞ் செய்யாமையில்ை, உலகத்தில் கிடைக்கும் உணவிலும், செல்வத் திலும் நம் பங்கு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. ஐரோப்பியர்கள் உண்டு புடைத்திருப்பதைக் காணும் நாம், நம் பசியின் காரணமாக அவர்கள் மேல் சீற்றங் கொள்கிருேம் ; நாமும் அதில் கை வைக்க முடியுமா எனப் பார்க்கிருேம். ஆனல் காம் எவ்வாறு அதனைச் செய்ய முடியும்? அவர்கள் கைதான் ஓங்கி இருக்கிறது. உலகமும், வாழ்வும் தரக் கூடிய ஒவ்வொரு சந்தர்ப்பமும் அவர்கட்கே இதுவரைப் பயன்பட்டன. கமக்கு எதுவுமே வரவில்லை. இந்தச் சந்தர்ப்பங்கள் ஏன் இதுவரை நம் பக்கம் வரவில்லை? உலகத்தைத் தம தாக்கி அனுபவிக்கும் உரிமையை, எந்தச் சக்தி ஐரோப்பியர்கட்கு வ்ழங்கியது? நிச்சயமாக, ஏதோ ஓர் உண்மை யின் சக்தியாகத்தான் இருக்க வேண்டும். விரும்பியவற்றைப் பெற வேண்டுமானல், நாம் அனைவரும் ஒன்ருகக் கட்டி ஐரோப்பியர் கள் பெற்றுள்ளவற்றை இழக்குமாறு செய்து விட்டால் போதும் என்று கினைப்பது பெருந் தவருகும். நம்முடைய விருப்பப்படி ஒரு புகை வண்டி இஞ்சின் ஓடவேண்டு மென்பதற்காக, அதை ஒட்டு பவனே அடித்து வீழ்த்தி விட்டால் போதும் என்பதற்கும் இதற்கும் வேற்றுமை இல்லை; இதைவிடப் பெரிய தவறு வேறு இல்லை. இவ்வாறு செய்வதால், இஞ்சினை ஒட்டும் ஆள் மூலமாகப் பொறி இயல் தொழிற்படுகிறது என்பதை மறந்து விடுகிருேம். நம்முடைய உணர்ச்சி வேகத்தினுலும் கோபத்தினுலும் எவ்வளவு சூட்டை உண்டாக்கிலுைம் எஞ்சினிடம் அது எந்தப் பயனையும் அளிக்காது; அந்த விஞ்ஞான அறிவே இஞ்சிலே ஒட்டப் பயன் படும். - ஒரு மோட்டார் வண்டியை வைத்து அதனைத் தானே ஒட்டிக் கொண்டிருந்த ஒருவனுக்கு, இரண்டு பிள்ளைகள் இருந்தனர். அந்த இருவருள் យ வண்டியை கன்கு ஒட்டக் கற்றுக் கொள்கிருனே அவனுக்கே வண்டியைக் கொடுக்கக் கருதின்ை தந்தை. அந்த 18