பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

268 அனைத்துலக மனிதனே நோக்கி இருவருள் ஒருவன், அறிவுக் கூர்மை யுள்ளவனுகவும் கற்றுக் கொள்ளவேண்டும் என்ற ஆர்வம் உடையவனுகவும் இருந்தமையின் உடனே காரைப் பற்றி நுணுக்கமாக அறியத் தொடங்கினன். மற்றவனே வெனில் வெள்ளே மனம் படைத்தவளுகவும் தங்தையிடம் கிறைந்த பக்தி கொண்டவனுகவும் இருந்தான். அவனுடைய பக்தி எந்த அளவிற்குச் சென்றிருந்தது எனில் தந்தையின் திருவடிகளி லிருந்து அவன் கண்களே எடுப்பதே இல்லை. எனவே அவன் வண்டியில் அமர்ந்து திருப்பும் சக்கரத்தைக் கையில் பிடித்தவுடன் எப்பக்கம் திருப்புவது என்றுகட்டத் தெரியாதவனுக இருந்தான். காரைப்பற்றி நன்கு அறிந்திருந்த கெட்டிக்கார மகன் ஒரு நாள் காரைத் தயார் செய்து கன வேகமாக ஒட்டிச் சென்றுவிட்டான். காரை ஓட்டுவதில் அளவு மீறிப் பற்றுக் கொண்ட அவன் இரவு, பகல் என்ற வேறுபாடு காணுமல் தந்தை என்ன நினைப்பார் என்று கூடக் கவலைப்படாமல், எந்நேரமும் வண்டியை ஒட்டிச் செல்வ திலேயே கருத்தாய் இருந்தான். ஆல்ை, அவன் தந்தை அவனக் கண்டித்து இனிக் காரைத் தொடக் கூடாது என்று கட்டளை இட்டானு ? அதற் கெதிராகத் தன் மகன் தன்னைப் போலவே காரை ஓட்டுவதில் விருப்பங் கொண்டிருக்கிருன் என்ப தறிந்து மகிழ்ச்சி யடைந்தான். கெட்டிக்கார மைந்தன் காரை ஓட்டுகையில் தன் சகோதரனின் விளை நிலத்தில்கூட ஒட்டி, நன்கு முற்றி இருந்தி பயிர்களேக்கூட அழித்தான். அவ்வாறு செய்யக் கூடாதெனச் சகோதரன் கண்டித்ததுகட்ட அவன் செவிகளில் ஏறவில்லை. . அவன் ஒட்டிச் சென்ற வேகத்தில் அந்தக் காரின் எதிரே வந்தவர் கள் மரணத்தை எதிர்பட்டவர்கள்போல் ஆயினர். எனவே வெள்ளே உள்ளம் படைத்த மகன் மறுபடியும் தந்தை யின் திருவடிகளில் கண்களைப் புதைத்தபடியே அவரை நோக்கி, 'கடந்தவற்றைக் கண்ட பிறகு, இனி எதனையும் நான் விரும்ப வில்லை ’’ என்று கூறி விட்டான். - கீழை நாடுகளில் உள்ள நம்முடைய கியாயமான தேவைகளைப் பற்றிக்கூடக் கவலைப்படவில்லை என்று கூறுவது தொல்லையை விலக்கு வாங்குவதாகும். நம்முடைய தேவைகளே மறுத்துவிட முடியாது. அவற்றைப் பூர்த்தி செய்த பிறகுதான் அவை நம்மை விட்டுவைக்கும். அவற்றைச் சட்டை செய்யாமல் இருந்து விட்டால் வாழ் நாள் முழுவதும் அவற்றிற்கு நாம் கடமைப்பட்டு வட்டி செலுத்த வேண்டி வரும். தேவைகளிலிருந்து விடுபட ஒரே வழி அவற்றை நிறைவேற்றுவதுதான். பரீட்சகர்களிடமிருந்து