பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

276 அனைத்துலக மனிதனை நோக்கி ஏதாவது ஒரு பாட்டைப் பாடி இருப்பின் எங்கேயாவது ஓரிடத்தில் அப் பாடல் இயல்பாக முடிந்திருக்கும். வரன்முறை யில்லாத ஓசை நிறுத்தம் இல்லாமல் ஓடும்; திருப்தியளிக்காமல் ஊக்கந் தரும். நடு இரவு கழித்துங்கூட ஓசை வெறியர்கள் அடங்கவில்லை. ஒவ்வொரு விருடியும் இந்தக் கூச்சலே அவர்கள் அனுபவித்துக் கொண்டிருந்தனர். ஆஞல், அதே நேரத்தில் எல்லையற்ற தொல்லே யில் ஆழ்ந்திருந்தேன் கான். - அட்லாண்டிக் சமுத்திரத்தின் அக் கரையில் உள்ள் சுண்ணும் பும், செங்கல்லும் சேர்ந்த காட்டில், என்னுடைய வருத்தமுற்ற மனம் இவ்வாறுதான் பேசியது; அவர்கள் இங்கே மிகப் பெரிய கூச்சலேக் கிளப்புகிறர்கள்; ஆளுல் இசை எங்கே இருக்கிறது?’ ' எனக்கு இன்னும் வேண்டும்; இன்னும் வேண்டும்’ என்ற இந்தச்' சொற்கள் இசையாக முடியாது. அதே போலத்தான் ஆகாய மளாவிய கட்டிடங்களையும் செல்வத்தையுங் கொண்ட அமெரிக் காவின் முன் கின்று மனந் தளர்ந்த ஏழை இந்தியன் தினந்தோறும் குழப்பத்துடன் அடுத்து என்ன?’ என்ற கேள்வியைக் கேட்டுக் கொண்டே இருந்தான். தவம் என்ற பெயரில் வெறுமையைப் போற்றுவதை நான் ஒப்புக்கொள்ள முடியா தென்று பல முறையும் திருப்பித் திருப்பிக் கூற விரும்புகிறேன். இசை, கெஞ்சை நிரப்ப வேண்டுமாயின் ஓசையும் பாட்டும் கட்டுப்பாட்டுள் அடங்கி கிற்கவேண்டும். வடிவத்தில் ஏற்படும் கட்டுப்பாடே ஆன்ம கிறைவை எடுத்துக் காட்டும். குடித்துவிட்டுப் போடப்படுகின்ற கடச்சலில் கட்டுப்பாடு என்பதே இருத்தற்கில்லே. இருதயத்தில் உண்மையான உணர்ச்சி இருக்குமாயின் அது வெளிப்படும் பொழுது மிக அடக்க ஒடுக்கத் துடனும், தூய்மையுடனும் வெளிப்படும். தூய்மையின் கட்டுப் 'பாடுதான் உண்மையான தவமாகும். மிகுதியின் தேவதையும், பிச்சைக்காரத் தெய்வமும் ஒன்று சேர்வதுதான் உண்மையில் 'ஒற்றுமை என்று கூறப்படும். - - - ஜப்பானில் சிலகாலம் இருந்தேன் ; பழைய ஜப்பானியப் பண்பாட்டைப்” தறி னான் பார்த்தவரையில் பெரிதும் விரும் பினேன். மிகைப்படுத்தல், அதீதம் என்பவை ஒரு சிறிதும் இல்லாமல் அழகின் ஆழத்தை உணர்ந்த ஒரு சாசனமாகும் அது. அவர்கள் உடை, விளையாட்டுக்கள், வீடுகள், தட்டுமுட்டுச் சாமான்கள், பவ்வியமான மரியாதை, சமயச் சடங்குகள் ஆகிய அனைத்தும் ஒரு முக்கியக் கருத்தில் இணக்கப்பெற்றுள்ளன. இந்த