பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்வியின் பேதமின்மை 283 தனித்திருக்க விரும்புவதைக் குறிக்கிறது. பழங்கால இந்தியாவில் இவ்வாறு நினைக்கக்கூட ஒத்துக்கொள்ள மாட்டார்கள். மனுவின் கொள்கைப்படி, வாழ்க்கையில் பொறுப்புக்களே ஒதுக்கிவிடுவதால் கட்டுப்பாட்டைப் பெற முடியாது; அதற்கெதிராக, அன்ருடக் கடமைகளே நிறைவேற்றுவதால் ஏற்படும் அறிவைக் கொண்டே கட்டுப்பாட்டைப் பெற முடியும். வாழ்க்கையின் பொறுப்புக்கள் என்பவை, ஜட உலகப் பொறுப்புக்களின் ஒரு பகுதியாகும். ஆன்மீக உலகில் புக வேண்டுமாயின் இந்த ஜட உலகப் பொறுப் புக்களைத் தட்டிக் கழிக்காமல் அவற்றை நிறைவேற்றி உயர்வு படுத்தவேண்டும். மனுவின் இந்தக் கொள்கையை ஆதரித்தே, மரணத்திலிருந்து வெற்றி பெறுவதற்கு உலகியல் அறிவைப் பெறவேண்டும் என்று உபநிஷதங்கள் கூறுகின்றன. இன்றைய ஐரோப்பிய விஞ்ஞானிகள், சிந்தனையாளர்கள் என்பவர்களிடமே உலக அறிவு இருத்தலின், அதனே விரும்பும் கீழை காட்டிலுள்ள நாம் அவர்கள் உதவியை நாடிப் பெறவேண்டும், l ஜட அண்டத்தின் பிடியிலிருந்து ஆன்மாவை விடுதலை செய்ய வேண்டுவதே ஆன்மீகப் பண்பாட்டின் ஒரு பகுதியாகும். பண் பாட்டின் அடிப்படை வேலையே இது ஆகலின், இது இன்று மேனுட் டிாரின் பொறுப்பி லிருந்துவருகிறது. இதனை நன்கு வலியுறுத்தின லொழியப் பெருவாரியான மக்கள் பசித் தீயின் காரணமாக, ஜடத் தின் அடிமைகளாக இருந்தே தம் சக்தியைச் செலவழித்து விடுவர். இதனுல்தான், இன்றைய மேனுட்டினர், சட்டையை மடக்கிக் கொண்டு மண்வெட்டி மூலம் பூமியை வெட்டுவதில் அவ்வளவு சுறு சுறுப்புக் காட்டுகிருர்களாகலின், அவர்கட்கு வானத்தைப் பார்க்கக்கூட கேர மில்லாமற் போய்விட்டது. வலிமையான இந்த அடித்தளத்தின்மேல் மேலே செல்லும் படிகள் கட்டி முடிக்கப் பட்டால்தான், காற்றையும் ஒளியையும் விரும்புகிறவர்கள் கவலை யின்றி.வாழமுடியும். அறியாமையே தளை என்றும் அறிவே விடுதலே என்றும் கம்மு டைய பழைய ஞானிகள் கூறியுள்ளனர். இவ்வாறு கூறும்பொழுது அவர்கள் ஆன்ம உலகத்தையே கருத்தில் கொண்டிருப்பினும், ஜட உலகத்திற்கும் இது பேருந்தும். ஆட உலகத்தின் சட்டங்கள கன்கு அறிந்தவனே விடுதலையடைந்த மனிதருவான்; அவற்றை அறியாதவர்கள் அடிமைகளாகவே இருப்பர். இந்த உலகம் போட் டுள்ள தடைகள் மாயமானவையாகலின் விஞ்ஞானத்தின் உதவி கொண்டு அவற்றை வெல்ல முடியும். விடுதலையை இந்த உலகத் தில் விரும்புவதால் மேடுை பசி, தாகம், நோய், வறுமை ஆகிய