பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/297

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

286 அனைத்துலக மனிதனை நோக்கி இது எவ்வாருயினும், ஒற்றுமைப்படாமலேயே தேசங்கள் பலவும் நெருங்கி வந்து கொண்டிருக்கின்றன. அதஞல் ஏற்படும் துயரம் உலகை இன்று ஆட்டிப் படைக்கிறது. ஏன் அந்தத் துயரம் இன்னும் ஆற்றுவிக்கப்பெற வில்லை ? ஏனென்ருல், தம்முடைய எல்லேக் குள்ளாக மட்டும் ஒற்றுமையாக இருக்கத் கற்றுக்கொண்ட தேசங்கள், அந்த எல்லேக்கு அப்பற்பட்டு ஒற்றுமையாக இருக்கமுடியாது. - என்ருவது ஒருநாள், நடைமுறைச் சூழ்நிலையின் காரணமாக, மனிதன், எல்லைக்குள் ஓரளவு உண்மையைக் காண்பானே யாகில், அப்பொழுது உண்மையைக் காட்டிலும் எல்லையையும், கடவுளேக் காட்டிலும் பூசாரியையும், அரசனேக் காட்டிலும் போலீஸ் காரனேயும் அதிகமாக மதிக்கத் தொடங்கி விடுகிருன். உண்மையின் சக்தியால் தேசங்கள் வளர்ச்சியடைந் துள்ளனவே தவிர, தேசீயம் வளரவில்லை. என்ருலும், தேசீயத்தின் பலி பீடத்தில் பலியிடுவதற் கென்றே உலகத்தின் பலவிடங்களி லிருந்தும், மக்களைச் சேகரித்தது ஐரோப்பா. பலியிடப்பட்டவர்கள் பிற நாட்டைச் சேர்ந்தவர்களாக இருக்கின்றவரை யாரும் அதற்கு மறுப்புக் கூறவில்லை. ஆனல் 1914-ம் ஆண்டில் ஐரோப்பியர் களேயே பலியிடும் கிலே ஏற்பட்டவுடன் தேசியம் என்பது நலம் புரிகின்ற தெய்வம் அன்று எனச் சிலர் கருதத் தொடங்கினர். பலியிடப்பட்டவர்கள் ஐரோப்பியர்களா, ஐரோப்பியர் அல்லாத வர்களா என்பதுப்ற்றி அந்தத் தெய்வம் கவலைப்பட வில்லை என்ப தால்தான் அவர்கள் இவ்வாறு நினைக்கலாயினர். அதுவரை, ஆசியாவில், நன்கு கொழுத்துத் தின்பதற்கு ருசியாக இருந்த பகுதிகளைப் பொறுக்கி எடுத்து தேசீயம், விருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தது. இவ்வாறு செய்வது கன்மை புரியுமா எனச் சில ஐரோப்பியர் கருதத் தொடங்கினர். உலகப் போர் முழு மூச்சாக கடந்து கொண்டிருக்கும்பொழுது, அது முடிந்தவுடன் தேசியமும் மறைந்து விடுமென்று அவர்கள் கருதினர். ஆணுல், போர் என்ற பெயரில் அது மறைந்து உடனே சமாதானம் என்ற போர்வையில் வெளிப்பட லாயிற்று. தேசீயம் விளித்த துயரத்தின் பிறகும், அதன் அடியும் உதையும் பெற்ற பிறகும், இன்னுங்கூடத் தேசியம் இவ்வளவு வலிமையுடன் இருப்பதைக் கண்டு ஐரோப்பியச் சிந்தனை யாளர் அச்சமடைந்தனர். தன்னலத்தை விரிவு படுத்தப் பயன்படும் இக் கொடிய விஷம், ஒரு தேசீய முட்டாள்தனமாகும்; இதுவே அனைத் துலக ஒற்றுமையை வெறுக்கிறது. இவ்வாறு இருந்துங்கூட