பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்வியின் பேதமின்மை 287 உலக மக்கள் ஒன்ருக ஆகியுள்ளனர். எந்த ஒரு மதமும், அது எவ்வளவு வலுவுடையதாகவோ அன்றி வல்லரசாகவோ இருப்பினும் சரி; இந்த உண்மையை மறுக்க முடியா தாகலின் இதனுடன் சமாதான ஞ் செய்துகொண்டே யாகவேண்டும். இன்றேல், தேசிய உணர்ச்சியின் தூண்டுதலால், வஞ்சகமான அரசியல் தந்திரத்தால் அஃாத்தையும் அழிக்கின்ற இந்தப் போர்களுக்கு முடிவே இல்லாமற் போய்விடும். நவீன காலத்தில், கல்வி என்பது காலத்தின் இயல்புக்கு ஏற்ற தாக இருத்தல் வேண்டும். தேசீயத்தை வழிபடுகிறவர்கள் தன் னலத்தைப் கல்வியின் மூலம் பரப்புவதற்குக் தகுந்த சமாதானத் தைத் தேடிப் பிடிப்பது தமது கடமை என நினைக்கின்றனர். அரசியல் பகைமை உணர்ச்சியை வளர்ப்பதற்குக் கல்வியை பயன் படுத்தியமைக்காக ஜர்மெனியை ஏனைய ஐரோப்பிய நாடுகள் கண்டித்தன; என்ருலும் பெரிய ஐரோப்பிய நாடுகள் அனைத்தும் இதே செயலே ஒவ்வொரு காலத்தில் செய்துள்ளன. தேசீயத்தைப் பிறப்பிக்கும் ஒரு முட்டை பொரிக்கும் யந்திரமாகத்தான், அவர்கள் அனவரும் கல்வியைக் கருதினர். எனினும் அவை அனேத்திலும் சிறப்புடைய விஞ்ஞான அறிவு பெற்றதாகலின் ஜர்மெனி தேசம் சிறந்த பொரிக்கும் யந்திரத்தைத் தயாரித்துச் சிறந்த குஞ்சுகளைப் பெற்றது. அவர்களுடைய செய்தித் தாள்களும் இதே இலட்சியத் துடன் பொய்யை வழங்குவதைத் தவிர வேறு என்ன செய்கின்றன? : கர்வத்தோடு கட்டிய தேசீயத்திலிருந்து எவ்வாறு விடுதலே அடைவது என்பதுபற்றித்தான் இன்று முக்கியமாகக் கற்றுக் கொள்ள வேண்டும். நாளைய வரலாறு சர்வ தேசியத்தில் ஓர் அத்தியாயத்துடன் தொடங்கும். அங் கிலேயில் அனைத் துலகத் தன்மைக்கு மாருன பழக்கங்கள், நடை யுடைகள், மரபுகள், எண்ணங்கள் ஆகியவற்றைக் கொண்டிருத்தல் தகாத தேசிய கள்வம் என்று ஒன்றிருப்பதை கான் அறிவேன். ஆல்ை கம்முடைய இந்திய ஞானிகள் அனைவருடைய முயற்சியும், இந்த ஒற்றுமை இன்மையைப் போக்கத்தான் பயன்பட்டது என்பதை, இந்தக் கர்வம் மறக்கச் செய்யாமல் இருக்க வேண்டுமெனப் பெரிதும் விரும்புகிறேன். இத்தகைய ஒர் இக்கட்டான கிலேயைத் தாங்கள் அடைவதற்கு, எவற்றைக் கற்ருேம், எவற்றை கினேத்தோம் அல்லது எவற்றைச் செய்தோம் என்று கடல் கடந்து வாழும் மக்கள் அனைவரும் தம்மைத் தாமே கேட்டுக்கொள்வது நம் காதிலும்