பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/309

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

£98 அனைத்துலக மனிதனை நோக்கி அந்த நாட்களில், எல்லாப் பகுதிகளிலிருந்தும் தோன்றிய ஊக்கம் வங்காளத்தின் இருதயத்தை நோக்கி இருந்தது. ஆல்ை, வெறும் உணர்ச்சி, நெருப்பைப்போலத் தான் பற்றியுள்ள பொருளையே எரிக்கும். அப் பொருளைச் சாம்பலாக ஆக்குவது தவிர ஆக்கச் சக்தி ஒன்றும் அதனிடம் இல்லை. மனிதனுடைய மனம், பொறுமை, முன்னுேக்கம், காமர்த்தியம் இவற்றைத் தாங்கி, இந்த நெருப்ப்ைப் பயன்படுத்தி, கையிலுள்ள கடினமான பொருள் க:ளக் காய்ச்சி அவற்றை மென்மை புடையனவாக ஆக்க வேண்டும். நம்முடைய அறிவின் ஆற்றலைக் கிளப்பிவிடத் தவறி விட்டோம். ஆகவே, இன்று கிடைக்கும் அகன்று பரந்துள்ள இந்த உணர்ச்சி ஒன்றை மட்டுங் கொண்டு மதிப்புடைய கிலேயான நிறுவனம் எதையும் கிர்மாணிக்க முடியாது. நம்முடைய தோல்வியின் காரணம் நம்முள்ளேயே இருக்கிறது. சென்ற பல காலமாக, நம்முடைய செயல்கள் அனைத்தும் ஒரு பக்கத்தில் உணர்ச்சியாலும், மற்ருெரு பக்கத்தில் பழக்க வழக்கத் தாலுமே பரிபாலிக்கப்பெற்று வந்தன். நம்முடைய சிந்தன சக்தி தொழிற்படாமல் மறைந்து கிடந்தது. அதற்குச் சுதந்திரம் கொடுக்கக் கமக்குத் தைரிய மில்லை. எனவே செயற்பாட்டுக்கு நம்மைத் தூண்ட வேண்டிய கிலேமை ஏற்பட்டவுடன் நம்முடைய உணர்ச்சியைத்தான் உடனடியாகத் துாண்ட முடிந்தது , நம் முடைய அறிவை மயக்க, கூடாகாரமான ஒரு கொள்கையைக் கூறி அதனை மயக்க மடையச் செய்தோம். இந்த முறையில் மனத்தைச் செயலிழக்கச் செய்த பிறகு, தன்ஜனத் தானே ஏமாற்றிக் கொள்ளும் இயல்பு எளிதாக வந்து விடுகிறது. பேராசை நிரம்பிய மனத்துக்கு, எளிதான வழிகளில் காரியத்தை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்று தோன்று வதால் அல்லாவுத்தீனுடைய அற்புத விளக்கை காடி அலகிறது. அல்லாவுத்தீனுடைய அற்புத விளக்கை காம் பெறக்கட்டுமேயால்ை அதைவிடச் சிறந்த தொன்று கிடைப்பதற்கில்லை. என்ருலும் பேராசை நிறைந்து, செயல் திறன் குறைந்துள்ள மனிதன் இதனே ஒப்புக்கொள்ள மாட்டான். விளக்குக் கிடைக்கும் என்று யாரேனும் கூறிஞற்கூட அது அவனத் துாண்டி விடுவதாகும். அவன் நம்பிக்கை பயனற்றது என்று எடுத்துக் காட்டினுல் தன் சொத்தையே யாரோ கொள்ளையடிப்பதுபோல அவன் கடச்சல் இடுவான்.