பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 முன்னுரை f கவலை இன்மை நீங்கி மக்களின் கவனம் அதிகமாக இழுக்கப் பட்டது. விடுதலை பெற்ற இந்தியாவின் பெருங் கடமைகளுள் ஒன்று கிராமங்கட்குப் புத்துயிர் ஊட்டுவதாகும். தாகூரின் அனுபவம், கருத்து என்ற இரண்டும் இந்த ஊக்கத்திற்கும் திட்டத் "திற்கும் பெரிதும் காரணமாகும். - - IV நம்முடைய பொருளாதார வாழ்வு வளம்பெறப் பழைய மரபும், - சோதனையும் ஒன்று கலக்க வேண்டும் என்று தாகடர் கோரினர். தனி மனிதனின் கெளரவத்திற்குப் பழுது வராத முறையில் மேனுட்டு விஞ்ஞான வழிகளைப் புகுத்த வேண்டும் என்றே அவர் விரும்பினர். கிராமமும், நகரமும் கூட்டுறவு கொள்ளும் முறையில் விவசாயத்தையும், தொழிலேயும் ஒன்று கலப்பதே அவருடைய பொருளாதார மாதிரியாகும். இவை அனைத்திலும், இந்தியா விலுள்ள செழிப்பான, பல்வேறு வகைப்பட்ட சமுதாயங்களிலும் ஒரு ஒன்றல் தன்மையைக் காணும் ஆக்க ஒற்றுமைத் தத்துவம் ஒன்றே அவரைத் தூண்டிவந்தது. அரசியலிலும்கூட, இந்தியா, மேடுைகள் ஆகியவற்றிற் காணப்படும் மிகச் சிறந்த பண்பாடுகளே ஒன்ருக்க முயன்ருர். பரிசாக வழங்கப்பட்டாற்கடடக் கொடுப்பானுக்கும், கொள்பவானுக் கும் இடையே பரஸ்பர மதிப்பு (ஸ்ரத்தை) இருந்தாலொழிய, அப் பரிசு இருவருக்கும் தீமை பயக்கும். அவரைப் பொறுத்தமட்டில் ஐரோப்பியப் பயணத்தை ஒரு யாத்திரையாகவே கருதினர். பிரிட் டனுக்கும், இந்தியாவிற்கும் இடையே அரசியல் வெறுப்பு இருந்த போதிலும், புறப்பாட்டுக்கு முன்னுள் என்ற கட்டுரையில் மேனுட்டுக் கருத்துக்களே எவ்வளவு மரியாதையுடன் அணுகினர் -என்பது விளங்கும். மேட்ைடுத் தொடர்பு புறத்தே தளையை ஏற்படுத்தினுலும், அதிகாரத்தின் எதிரே காம் கடந்துகொள்ளும் முறையை மாற்றிவிட்டது. மேலும், இதுவரை கம் தேசீயக் குறை பாடாக இருந்துவந்த மனப்பான்மையை, தீமையின் எதிரே போராடாமல் அதனை ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மையை, ஒரேயடியாகப் போக்கி விட்டது என்பதையும் மாறும் யுகம்’ என்ற கட்டுரையில் விளக்கியுள்ளார். தாகூர், மேட்ைடு முறையில் அமைந்த ஜனநாயகத்தை அப்படியே ஏற்றுக் கொண்டார். ஆனல், அதனுடன் இந்தியர்கள் கண்ட சமுதாய ஊக்கம், சமுதாயப் பொறுப்புணர்ச்சி ஆகியவற்