பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/310

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சத்தியத்தின் அழைப்பு 2.99 பிரிவினை நாட்களில் (வங்காளப் பிரிவினை) ஒரு சில இளைஞர் கள் புரட்சியின் மூலம் ஒரு பொற்காலத்தைக் கொணர முனைக் தனர். அவர்கள் பற்ற வைத்த பெரு நெருப்பில், தம்மையே பலி யாக இட்டுக் கொண்டனர். ஆகலின், நம்மிடமிருந்து மட்டுமல் லாமல், அகில உலக்த்திலிருந்தும் நன்றியைப் பெறத் தகுதியுடை யவர்க ளாகின்றனர். அவர்களுடைய தோல்வியிற்சுடட ஆன்மீக ஒளி வீசுகிறது. நாடு தயாராக இல்லாத நேரத்தில் தோற்றுவிக்கப் படும் புரட்சிப்பாதை, எந்த இலட்சியத்திலும் கொண்டு விடுவதில்லை என்பதை, எல்லே மீறிய வேதனையின் மூலமும், மிக உயர்ந்த சுய அர்ப்பணத்தின் பிறகும், அறிந்து கொண்டார்கள். இலக்கை நோக்கிச் செல்வதுபோலக் காணப்பெற்ற பொய்யான பாதை, இலக்குக்குக் கொண்டு விடாததோடுகட்ட, அதில் இருந்த முட்கள் மூலம் நடந்து சென்றவர்களின் கால்களைக் கிழித்து விட்டது. ஒரு பொருளுக்குப் பாதி விலே கொடுப்ப தென்பது, விலையையும் பொருளையும், ஒரு சேர இழிப்பதாகும். தைரியம் வாய்ந்த அக் கால இளைஞர்கள், எல்லா மக்களின் சார்பாகவும், தங்களில் சிலர் செய்யும் தியாகம் ஒரு புரட்சியைக் கொண்டு வந்து விடும் எனக் கருதினர். தங்கள் சக்தி யளவில் மிக உயர்ந்த விலையைக் கொடுத் தனர் என்ருலும் அவ்விலே போதியதாக இல்லை. ஒரு நாட்டு மக்கள் விடுதலை யடையவேண்டுமெனில் அந்த விடுதலை யுணர்ச்சி அங் காட்டு மக்கள் அனைவருடைய மனத்திலும் எழ வேண்டுமே தவிர, அக் காட்டின் ஒரு சிலர் மனத்தில் மட்டும் தோன்றினுல் பயனில்லை. ஓர் இரயில் வண்டியில் இணைக்கப் பெற்ற மூன்ரும் வகுப்புப் பெட்டியை விட்டுவிட்டு மிகவும் வசதியுடன் அமைக்கப் பெற்ற முதல் வகுப்புப் பெட்டி மட்டும் முக்திக் கொண்டு சென்று விட முடியாது. தேசப் பற்று மிகுந்த அந்தக் கூட்டத்தில் எஞ்சியுள்ள வர்கள், நாட்டை ஆக்க் வேண்டுமாயின் அது நாட்டு மக்கள் அனைவரும் சேர்ந்து, தங்கள் முழு மனத்தோடும், உறுதியோடும், ஒவ்வோர் உறுப்பையும் அதற்காகவே செலவிட்டுச் செய்: வேண்டிய காரியம் என்பதை உணர்திருப்பார்கள் என கி?னக் கிறேன். -

  • s o i &

பார்க்கும் பொழுது பிற தேகங்களின் முன்னேற்றத்தைப் அரசியல் வண்டிக் குதிரைதான் நம் கண்ணெதிரே பெரிதாகக் காட்சியளிக்கிறது. வண்டியின் வேகம் முழுவதும் அந்தக் குதிரை யைப் பொறுத்திருப்பது போலத் தெரிகிறது. குதிரையின் பின்னே உள்ள வண்டியும் ஓடுவதற்குரிய நிலையில் இருக்க வேண்டும் 20 -