பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/315

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

304 அனைத்துல்க மனிதனை நோக்கி அன்பின் பயன் கிலேத்து நிற்கக் கூடியது ; அதுவே அதன் பயனுகவும் உள்ளது. * - புதிதாகக் காணப்பட்ட விடுதலைக் காற்றை நுகர - வேண்டும் என்ற துடிப்பினுல் உங்தப்பெற்று பான் தாய் காட்டுக்கு நீண்டு வந்தேன். ஆனல் இங்குக் கண்டவையும், கான் அறிந்த வையும் அப்பொழுது என்னே வருத்தி கின்றன. மக்களுடைய மனத்தை ஏதோ ஒரு பாரம் அழுத்திக் கொண்டிருப்பதுபோல் தெரிகிறது. ஒரு வலிமையான அழுத்தம் வேலை செய்கிறது. அந்த அழுத்தம் அனைவரையும் ஒரே குரலில் பேசச் செய்வதுடன் ஒரே விதமான செய்கையும் செய்யச் சொல்கிறது. என் ஐயங்களை வெளியிட்டுக் கிடைக்கும் விடைகளைக் கொண்டு நானே ஒரு முடிவிக்கு வர விரும்பியபொழுது, என் நண்பர் கள் என் வாயைப் பொத்தி தயை கூர்ந்து அமைதியாக இருங் கள் ” என்று என்ன அடக்கி விட்டனர். நாட்டில் ஒரு வகையான கொடுமை இருந்து வருகிறது. அது வெளிப்படையாகக் காணப் படா விட்டாலும், வெளிப்படையாக உள்ள ஹிம்சை முறையைவிட மோசமானதாக இருக்கிறது. பிரகடனம் செய்யப்பட்ட கொள்கை அறிவுடையதா என்று சந்தேகப்படுகிறவர் எவரேனும் தம் ஐயத்தை இரகஸ்யமாகக் கூறினுல்கட்ட அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. வெளிநாட்டுத் துணிகளைத் தீக்கு இரையாகும் செயலேப் பற்றித் தன் கருத்து வேறுபாட்டைத் தையரியத்துடன் வெளியிட்டது ஒரு பத்திரிகை. உடனே வாசகர்களின் மறுப்புக்கள் பறந்தன. பற்பல பேல்கள் மில் துணிகளே விழுங்கிய நெருப்புக்கு. இந்த செய்தித்தாளேயும் சாம்பராக்குவது எளிது. மக்களில் ஒரு பகுதியினர் தமக்குக் கொடுக்கப்பட்ட பணியை ஒரு வகை வெற்றியுடன் செய்து கொண்டிருப்பதையும், மற்ருெரு பகுதி அச்சத்தின் பிடியில் அகப்பட்டு, செயலிழந்து நிற்பதையும் காண்கிறேன். கேள்வி கேட்பதே கூட்ாது . என்ற கருத்து நிலவுவதாகத் தொகிறது. குருட்டுத்தனமான கீழ்ப்படிதல் தவிர வேறு ஒன்றும் இருக்கக்கூடாது. யாருக்குக் கீழ்ப்படிவது மக்தி, உச்சாடனம் போன்ற சில சொற்களுக்கா ? அன்றி அர்த்த மற்ற சடங்குகட்கா? - ஏன் இந்தக் கீழ்ப்படிதல் நடைபெற வேண்டும் ? இங்கேயு கூடப் பேராசை என்ற நம்முடைய ஆன்ம விர்ோதிதான் இரு கிறது. மிகவும் விரும்பத் தகுந்த ஒரு வாக்குத் தத்தம் கொடுக்க