பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/318

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சத்தியத்தின் அமைப்பு 307 க்ாட்டாமல் கூறி இருந்தால் அதுவே சிறந்தது. ஓர் உண்மையான வீணையை ஒரு கம்பியில் செய்ய முடியாது ; பல்வேறு வகையான சாமான்களும் சிறந்த தொழில் வன்மையும் வேண்டும் ; ஒரு சிறு தவறு நேர்ந்தாலும்,அது சுருதி தவறி விடும் என்பதைக் கூறி இருக்க வேண்டும். - T மகாத்மாவினுடைய அன்புசெய்யும் சக்தியில் கமக்குள்ள கம்பிக்கை குறையா திருக்கட்டும் , ஆளுலும் சுயராஜ்யம் என்பது ஒரு குச்சியாலும் கம்பியாலும் ஆகும் காரிய மன்று. பல்வேறு முரண்பட்ட வழிகளுடன் கூடிய முயற்சியாகும் அது; உணர்ச்சி, தூண்டுதல் என்பவை எவ்வளவு தேவையோ அவ்வளவு, ஆராய்ச்சி, தெளிந்த சிந்தன, என்பவையும் வேண்டும். பொரு ளாதார வல்லுநர்கள், கல்வித் துறையாளர்கள், இயந்திரப் பொறியியலார்கள் ஆகியவர்கள் தம் கருத்தையும் முயற்சியையும் இந்தப் பன்முக முயற்சிக்கு உதவ வேண்டும். மக்களினுடைய அறிவு முழுவதும் விழித்திருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் தான் கேள்வி கேட்கும் இயல்பு தடைப்படாமலிருக்கும். மறைமுக மாகவோ நேரடியாகவோ பிடிவாதப்படுத்தி மனத்தை அச்சுறுத் தவோ, தொழிற் படாமற் செய்யவோ கூடாது. இந்த நாடு யாருடைய அழைப்புக்கும் செவிசாய்ப்ப தில்லை என்பதைக் கிடைத்த அனுபவத்தால் அறிந்திருக்கிருேம். காட்டின் சக்திகளே இத்தகைய ஆக்க வேலையில் யாரும் ஒற்றுமைப்படுத் தாமையால், காலம் வீணுகிக் கொண்டிருக்கிறது. நம்மை கோக்கி இந்த அழைப்பு விடுப்பதற்கு யாருக்கு உரிமையும் ஆற்றலும் இருக்கிறதோ, அத்தகைய தலைவனுடைய வரவுக்காக இத்துணை நாள் காத்துக் கொண்டிருந்தோம். ஒரு காலத்தில், காட்டில் பர்னசாலையில் வாழ்ந்த கம்முடைய குருமார்கள் தங்கள் தெளிந்த அறிவின் உதவியில்ை இத்தகைய ஒர் அழைப்பை விடுத் தாாகள " சிற்றறுகள் கீழ்நோக்கி ஓடுவதுபோல, மாதங்கள் ஓடிச் சென்று ஆண்டில் கலப்பதுபோல, oro or பிரம்மச்சாரிகளும் எல்லாத் திசைகளிலிருந்தும் என்னிடம் ஓடி வருவார்களாக,’’ அந்தப் ப்ழைய காலத்தின் உண்மைக் காட்சி இன்னும் வாழ்ந்து வருகிறது; அதனுடைய குரல் இன்னும் எதிரொலிக்