பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/319

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 & 8 . அனைத்துலக மனிதனே நோக்கி கிறது. அப்படியானல் கம்முடைய இன்றையப் பெருக் தலைவர் அதேபோன்று தம் அழைப்பை அனுப்பி மக்களுடைய செயல்படும் திறனை ஏன் ஒன் ருக்கக் கூடாது? “ என் குரல் காதில் விழுபவர் கள் அனைவரும் எல்லாத் திசைகளிலிருந்தும் இங்கு வருக” என்று ஏன் கூறக் கூடாது? மக்களே முழுவதும் தட்டி எழுப்புவதில்தான் சுதந்திரம் என்பது அடங்கி இருக்கிறது. இவ்வாறு அழைக்க கூடிய சக்தியை மகாத்மாவுக்கு ஆண்டவன் கொடுத்துள்ளான். இதுவே அங்தச் சிறந்த தருணமாக ஏன் இருக்கக் கூடாது? அவருடைய அழைப்பு வந்துள்ளது என்ருலும் அது ஒரு குறிப்பிட்ட பகுதியினருக்கே கிடைத்துள்ளது. அனைவரையும் நோக்கி அவர் “ நூல் நூற்று ஆடை நெய்யுங்கள்; நூல் நூற்று ஆடை நெய்யுங்கள் ” என்று கூறியுள்ளார். ஒரு பெரு முயற் சிக்கு அடிகோலும் புதிய யுகத்தின் அழைப்பா இது தேனிக்களே தேன் கூட்டில் வாழுமாறு இயற்கை அழைத்ததும் கோடிக் கணக்கான ஈக்கள் அந்த அழைப்புக்குச் செவி சாய்த்துச் சிறந்த பணியாற்றுவதற்காகத் தம் ஆண்மை, பெண்மைத் தன்மைகளைப் பலி இட்டுவிட்டன. தன்னையே அர்ப்பணிக்கும் இத்தகைய தியாகம் சுதந்திரத்துக்கு எதிரான பயனை அளித்தது. அழைப்பு வந்தவுடன் தம்முடைய சக்தியை ஆராயாமல் போக்கிக் கொள்பவர்கள் அவர்களுக்குள்ளேயே ஒரு சிறையைச் சுமந்து செல்கிருர்கள். இந்த எளிதான வழியை மேற்கொள்ள அழைக்கும் அழைப்புத் தேனீக்கட்கு உகந்ததே தவிர மனிதனுக்கு அன்று. என்று மனிதனுடைய முழுச் சக்தியும் கேட்கப்படுகிறதோ, அன்று தான் அவனுடைய முழுச் சக்தியையும் வெளிக் கொணர முடியும். தன்னிடமுள்ள மக்களின் சக்தியை எல்லாம் ஒரு குறுகிய துறையில் மட்டும் செலுத்தி வலுவடைய வேண்டும் என்று கினைத்த ஸ்பார்ட்டா நாடு தன் கருத்தில் வெற்றி பெறவில்லை. இதற்கு எதிராக ஏதன்ஸ் காட்டினர் மக்களின் சக்தி முழுவதற்கும். வழி வகுத்துக் கொடுத்தமையின் ஏதன்ஸ் வெற்றி பெற்றது. அதனுடைய வெற்றிக் கொடி நாகரிகத்தின் உச்சியில் இன்றும் பநன்று கொண்டிருக்கிறது. ஐரோப்பாவின் தொழிற்சாலைகளிலும், படைஞர் வாழும் பாடி வீடுகளிலும் மனிதனின் மனிதத் தன்மை கொஞ்சங் கொஞ்சமாகக் குறுக்கப்பட்டுக் கொண்டே வருகிறது. மிகக் குறுகிய தங் கலத்திற்காக மானிடம் பலியிடப்பட்டு வருகிறது மேடுைகளில் துயர இருள் வலுப்பட்டு வருவதற்கு இதுவன்!ே காரணம்! பெரிதாகவும் சிறிதாகவும் s—sirst இயந்திரங்கன்ா