பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/326

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சத்தியத்தின் அழைப்பு 315 'மூழ்கி இருந்தோம். அடிமைத் தளையிலிருந்து நம்முடைய அரசியலே விடுவிக்க முயற்சி எடுக்கும் இந்த நேரத்தில்கட்ட, நம்முடைய பழைய பகிஷ்கரிப்புப் பல்லவியையே பாடிக் கொண்டிருக்கப் போகிருேமா ? கோப உணர்ச்சியால் எழுப்பப்படும் துாசிப் படலம் பெரிய உலகத்தைச் கூ கம்முடைய காட்சியிலிருந்து மறைத்து விடுகிறது. இந்தியாவின் மிகப் பெரிய பரப்பை உலக அடிப் படையில் கான மறந்தால் நம்முடைய நாட்டைப் பற்றிய வருந்தத் தகுந்த ஒரு படம்தான் கம்மிடம் எஞ்சும். கம்முடைய நோக்கத்தை, கேவலம் உலகாயத முறையில் எதிர்பார்க்கும் அளவுக்குக் குறுக்கிக் கொண்டது மிகவும் வருந்தத் தகுந்த விஷயமாகும். ஆனால், இன்று மேடுைகளிற் கூட, உலகாய தத் தேவைகட்கு அப்பாற்பட்டு வளர வேண்டும் என்ற எண்ணம் வளர்ந்திருப்பது கன்கு தெரிகின்றது. அந்த காட்டில் துறவு மனப் பான்மையை மிகுதியாகப் பெற்றுள்ளவர்கள் பலரைக் கண்டேன். அந்த மனிதர்கள் தேசீயம் என்ற அற்பத் தளைகளிலிருந்து விடுதலை பெற்றவர்கள் : தங்களுடைய மனத்தில் மானிட சமுதாய அடிப் படை ஒன்ருயிருப்பதை உணர்ந்தவர்கள். அந்தப் பெரிய இலட்சியத்திற்கு உழைக்கும் வகையில் எந்தத் தியாகத்திற்கும் அவர்கள் தயாராக இருக்கிருர்கள். அத்தகைய மனிதர்களே இங்கி லாங்தில் கண்டேன். அடிமைப்பட்ட தேசங்களே அதிகாரத்தின் கொடுங் கோன்மையிலிருந்து விடுவிக்க அவர்கள் பாடுபடுவதால் அவர்களுடைய சொந்த காட்டு மக்களிடமிருந்து ஏச்சையும், துன்பத்தையும் ஏற்றுக் கொண்டுள்ளனர். இத்தகைய துறவு மனப்பான்மையை பிரான்ஸ் காட்டிலும் கண்டேன். தம்முடைய தாய் காட்டிலேயே ஜாதிப் பிரஷ்டம் செய்யப்பட்டுள்ள ரோமன் ரோலண்ட் ஒர் உதாரணமாவார். ஐரோப்பாவின் சிறிய சிறிய தேசங்களிலும் இந்த மனப்பான்மையைக் கண்டுள்ளேன். உலக ஒற்றுமை என்னும் கம்பிக்கையால் முகத்தில் ஒளியுடன் வசிக்கும் ஐரோப்பிய மாணுக்கர்களேயும் கண்டேன். தங்களுண்டய ஒளி பொருந்திய எதிர் காலமாகிய கனவை அடையுமுன், எவ்வளவு பொறுமையோடும் மனத் திடத்தோடும் எவ்வளவு துன்பங்களேச் சகித்துக் கொள்ள கேப்டும் என்பதையும் அம் மாணவர்கள் அறிக் திருந்தனர். இந்த விடியற்காலமாகிய கல்வேளேயில் நாம் மட்டும் பிறரு டைய குற்றங்களேயே எடுத்துக் காட்டும் பல்லவியை ஓயாமல் பாடிக் கொண்டு, கம்முடைய ஆக்க வேலைத் திட்டங்களே இந்தத் - 21.