பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/329

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.18 அனைத்துலக மனிதனே நோக்கி சூழ்நிலையில் இந்த எண்ணத்தின் நன்மை தீமைகளைப் பற்றி ஆராயத் தொடங்குவது, ஒரு வாதப் புயலேயே கிளப்பி விட்டுவிடும். அன்றியும் அறி வென்னும் கப்பல் அடைய வேண்டிய துறை முகத்தை அடைய முடியாதபடி இந்தப் புயல் செய்துவிடும். சுய ராஜ்யம் பெறுவது மிகவும் கடினமான காரியம் என்றுதான் இது வரை காம் எண்ணிக் கொண்டிருந்தோம். இதற்கெதிராக, அதை மிகவும் எளிதாகப் பெற முடியுமென்றும், மிகக் குறைந்த கால அளவில் பெற்றுவிட முடியுமென்றும், யாரேனும் கூறுவதைக் கேட்டால் அதை நம்ப முடியாதென்று கூற யாருக்குத்தான் துணிவு பிறக்கும்? செம்பைப் பொன்னக மாற்றும் யோகியைக் கண்டு வியக்கும் மக்கள் உண்மையில் முட்டாள்க ளல்லர் , ஆளுல் அவர் களுடைய அறிவைப் பயன்படுத்த முடியாதபடி பேராசை குறுக்கே கின்று தடை செய்கிறது. என்ருலும், சுய ராஜ்யம் வாயிற்படியில் காத்துக் கொண்டு கிற்கிறது என்ற செய்தியைக் கேட்டுச் சமீப காலத்தில் கம் மக்கள் பெரிதும் மகிழ்ச்சியடைந்தனர். குறிப்பிட்ட நாளும் வந்துபோயிற்று; ஆகுலும் சுய ராஜ்யம் வரவில்லே. போடப்பெற்ற கிபந்தனைகளே நாம் நிறைவேற்ருமல் விட்டதே வாராமைக்குரிய காரணம் என்று கறிஞர்கள். அந்த நிபந்தனைகளே எவ்வாறு நிறைவேற்ற வேண்டும் என்று அறிவதே ஒரு பெரிய பிரச்னையாக இருந்ததைக் கண்டு யாரும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. ஹிந்துக்களும் முஸ்லிம்களும் உண்மையாக நட்பை மேற்கொண்டால் சுய ராஜ்யத்தை நோக்கி நீண்ட தூரம் சென்றதாக முடியும். உண்மை யான தொல்லை என்ன வென்ருல் அவர்கள் ஒன்று சேர்வதில்லை. அவர்கள் ஒன்றுகூடிவிட்டால் அதன் பிறகு ஒவ்வொரு நாளும் சுய ராஜ்யம் தொடங்குவதற்கு ஏற்ற நாளாகலாம். இதுபற்றிய ஒரு கால அட்டவணையை அரசினர் வெளியிட்டால் அதனல் பெரு மகிழ்ச்சி ஏற்படலாமே தவிர, உண்மையான வளாச்சிக்குக் குப்பு மடைந்துள்ள மனம் பயன்படாது. --- - குறிப்பிடப்பெற்ற காலம் கட்ந்து பல நாட்களாகி விட்டன : என்ருலும் அந்தப் பழைய உற்சாகம் ஓரளவு இருந்து கொண்டே இருக்கிறது. ஒன்றிரண்டு குறுகிய வழிகளே இலக்கை அடைவ தற்கு ஏற்ற வழிகளாகும் என்ற குருட்டு கம்பிக்கையில் ஏற்பட்ட குழப்பம், அவசரம், வேகம் ஆகியவை மட்டும் எஞ்சியுள்ளன. அந்த வழிகளில் சர்க்கா அல்லது ராட்டை மிகவும் முக்கியத்துவம் பெற்று விளங்குகிறது. | -