பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/332

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுயராஜ்யத்திற்கு உழைத்தல் 321 'எக்காரணத்தை முன்னிட்டும் சோம்பேறி என்று கூற முடி"த. உலகத்தில் மற்ற சில இடங்கள்கூடச் சணல் உற்பத்திக்கு Dಣ தாக இருப்பினும் அதைப் பயிரிடுவதால் ஏற்படும் கஷ்டத்தி கிணத்து யாரும் முன்வருவ தில்லை. சணல் பயிர் வங்காளத்தின் ஏகபோக உரிமைங்ாக இருக்கிறதென்ருல் அது அந்த மண்வள9 தோடுமட்டு மல்லாமல் மக்கள் வளத்தையும் பொறுத்திருக்கிறது. என்ருலும் சணல் பயிரிடும் இந்தக் கடும் உழைப்பாளர்கள், வெள்ளரி பயிரிடுபவர்கள் ஆண்டுதோறும் எடுக்கின்ற இலாபத் தைக் கண்டு கொண்டே இருந்துங்கட்ட, தங்களுடைய மணற்பாங் கான பூமிகளில் வெள்ளரி பயிரிடுவதில்லை; ஏனென்ருல் அவர்கள் இந்தப் புதிய பழக்கத்தை மேற்கொள்ளக் கூசுகிருர்கள். மக்களுடைய மனத்தில் படிந்துள்ள பழைய பழக்கமாகிய பாதையை மாற்றிப் புதிய பாதையில் திருப்புவதே இன்று நம் முன்னர் இருக்கின்ற பெரிய பிரச்னை. புறத்தே எளிதாகக் காணப் படுகின்ற ஒரு வழியைக் காட்டிவிடுவதால் எந்த நற்பயனும் விளையும் என்று நான் கருதவில்லை. மனம் மாறுவதைப் பொறுத்தே பிரச்னையின் தீர்வு காணும் கிலே அமைந்துள்ளது. ஹிந்துக்களும் முஸ்லீம்களும் ஒன்றுசேரட்டும் என்று உத்திரவு போடுவது எளிது. கீழ்ப்படியும் பழக்கமுள்ள ஹிந்துக்கள் கிலா பத் இயக்கத்தில் கூடி விடுவார்கள். அது மிகவும் எளிதான காரியம். தங்களுடைய பொருளாதார வசதிகளில் சிலவற்றைக் கூட முஸ்லீம்களுக்கு விட்டுக்கொடுத்து விடுவார்கள். ஆனல் அவர்களே வேறு பிரித்து வைத்திருக்கும் ஆழமான மன மாற்றங் களே பெரும் முட்டுக் கட்டைகளாக உள்ளன. இதுவே அந்த விஷயத்தின் இருதய ஸ்தானம். ஹிந்துவுக்கு முஸ்லீம் அசுத்த மானவன் : முஸ்ல்மானுக்கு ஹிந்து கடவுள் கம்பிக்கை இல்லாதவன். இருவரும் சுய ராஜ்யத்தை எவ்வளவு விரும்பினுலும் இந்த மன நிலையிலிருந்து மாறுவதாகத் தெரியவில்லே. ஆங்கிலேயப் பழக்கத்தை மிகுதியும் மேற்கொண்டுள்ள ஒரு ஹிந்து ையான் அறிவேன். எல்லா வகையான கறிகளையும் அவர் விரும்பி உண்பார். ஆளுல் முஸ்லீம்கள் சமைத்த காப்பாட்டு விடுதிச் சோற்றை மட்டும் தொடமாட்டார். அந்தக் சோறு அவருடைய தொண்டையில் இறங்க மறுப்பதாக அவர் கூறுவார். இந்த உணவு பற்றிய மகன கிலேதான் சுமுகமான உறவு முறைக்கும் முட்டுக் கட்டையாக இருக்கிறது. சமய உத்திரவுகளின் அடிப்படையில் பழகிய மனப் பழக்கமே, ஜாதி உணர்ச்சிக்குப் பன்னெடுங் காலமாக இடங்