பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/335

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.24 அனைத்துலக மனிதனே நோக்கி சீர்ப்ப்டுத்த வேண்டும் என்பன்பதற்குப் பதிலாக, அவனே சர்க்கார் சக்கரத்தைச் சுற்றுமாறு கூறுவது நம்முடைய வன்மைக் குறை வையே காட்டுகிறது. அவனைச் சோம்பேறி என்று ஏக்கின்ற காம், உண்மையில் அவனுக்குத் தரும் அறவுரை,கழ்முடைய மனத்தைச் சூழ்ந்துள்ள சோம்பரையே எடுத்துக் காட்டுகிறது. - - வீட்டிலேயே நூற்று மிகுதியாகத் தயாரிக்கப்படும் நூல், பொருளாதார முறையில் தொழிலாளிக்கு இலாபங் தரும் என்ற கருத்தில் தான் இதுவரைப் பேசியுள்ளேன். ஆளுல் இது வெறும் சங்கற்பமே தவிர வேறு அன்று. இந்த விஷயம் பற்றி நிபுணர்கள் தம்முடைய சந்தேகத்தை அறிவித்துள்ளனர். கிபுணத்துவம் . இல்லாத என் போன்றவர்கள் அத்தகைய போராட்டத்தில் சிக்கிக் கொள்ளாமல் இருப்பது கலம். சுயராஜ்யம், சர்க்கா என்ற இவை இரண்டின் இடையே ஏற்பட்டுள்ள குழப்பம், நாட்டில் சுய ராஜ்யம் என்ருல் என்ன என்பது பற்றியே ஒரு குழப்பமான சூழ்நிலையை உண்டாக்கியுள்ளது. நாட்டின் கலன் என்ருல் என்ன என்பது பற்றித் தெளி வானதும் விரிவானதுமான ஒரு கருத்து நம்மிடம் இருக்க வேண்டும். அரைகுறையான காட்சி கம் சக்தியையே வளர்ச்சி குன்றச் செய்து விடுகிறது. எவ்வளவுக் கெவ்வளவு நம் மனத்தைக் குறைவான அளவுக்கு வேலை வாங்குகிருேமோ அவ்வளவுக் கவ்வளவு நம் மனம் சோம்பித் திரிகிறது. நம்முடைய தேசீய முன்னேற் றத்தில் சர்க்காவுக்கு முதலிடம் தருவது நம்முடைய அறிவையே. குறைத்து மதிப்பதாகும். நாட்டின் கலமாகிய பிம்பத்தை விரிவான முறையில் எடுத்துக் காட்டி அதன் எல்லாப் பகுதிகளேயும் நாம் காணுமாறு செய்வதுதான், மக்களுடைய சக்தி என்று கூறப்படும் வலிமை பொருந்திய ஆறு ஓடிப் பாய்வதற்கு ஏதுவாகும். அந்தச் - சக்தியாகிய ஆற்றுக்கு வளமூட்டும் முறையில் நம் உணர்ச்சிகளும், அறிவும் துனே செய்யும். அந்த பிம்பம் அற்பத்தனமானதாக ஆகி விட்டால், நம் உழைப்பும் அற்பமாகி விடும். உலகத்தில் மிகக் கடினமான தியாகத்தை நாட்டுக்கும், மானிடத்துக்கும் செய்த பெரியவர்கள், மிகப் பெரிய ஒளி பொருந்திய ஒரு காட்சியால் ஓயாமல் உந்தப்பெற்றனர். தன்னலத்தைத் தியாகஞ் செய்யும் நிகழ்ச்சிகட்குப் பெருங் காட்சிகள் என்னும் உங்தல்கள் வேண்டும். அந்தக் காட்சிகளை எத்தனை வண்டி நூலினுலும் உண்டாக்க முடியாது. கணக்குப் போடும் அறிவைக் கொண்டு எத்தனை புள்ளி விவரக் கணக்கை எடுத்துக் காட்டினலும் மனிதனுடைய