பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/338

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுயராஜ்யத்திற்கு உழைத்தல் 327 சுய நிறைவை அடைய முடியும். நம்மைச் சுற்றி அடுத்துள்ள இடங் களில்தான் வேலையைத் தொடங்க வேண்டும். அதன் பிறகே அந்த வேலே பரவலாக்கப்பட வேண்டும். தொடக்கத்தில் சிறிய அளவில் செய்யப்படும் வேலையை நாம் எள்ளி நகையாடுவதாக இருப்பின் கீதையின் சொற்க்ளே நினைவில் கொள்ள வேண்டும். தர்மம் சிறி தளவு தொட்டவுடன் பெரியதாகிய அச்சமும் நீங்கி விடுகிறது . என்பனவே அச் சொற்கள். மற்ருெரு வகையாகக் கூறினல் சத்தி யத்தின் சக்தியை அதனுடைய பரிமாணத்தைக் கொண்டு அள விடாமல் அதன் இயல்பைக்கொண்டே காண வேண்டும். கூட்டுறவு முறையில் சுய கிர்ணய முயற்சியை இவ்வாறு பரப்பினுல், இதன் பயணுக ஏற்படும் பெருமை, கர்வம் ஆகிய வற்றின் அகமுக அனுபவம் சுயராஜ்யத்திற்கு வலுவான அஸ்தி வாரமாகும். இந்த அனுபவம் அகத்தும் புறத்தும் இல்லாமற் போவது நம்முடைய உணவு, சுகாதாரம், கல்வி, அறிவு, இன்பம் ஆகியவற்றின் இன்மை அல்லது வறுமைக்குக் காரணமாகிறது. இந்த ஆன்மீக வறுமையையும் மீறிக் கொண்டு சுயராஜ்யம் உண்மையில் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பது பைத்தியக்காரத் தனம. நூல் நூற்பதை ஆக்க வேலை என்று கறுவது உண்மையன்று. மரத்தால் ஆகிய சக்கரத்தைச் சுற்றுவதால் மனிதனும்கூட அந்தச் சக்கரத்தின் இணைப்பாக, மற்ருெரு யந்திரமாக ஆகி விடுகிருன், மனம் என்ற ஒன்றில்லாத காரணத்தால் யந்திரம் தனக்குத் தானே போதுமானதாக, தன்னையன்றி மற்ருென்றை அறியாததாக இருக் கிறது. சர்க்காவோடு சேர்ந்த மனிதனும் இதே ரகத்தில்தான் இருக்கிருன். அவன் நூற்கும் நூல், பிறருடன் கொள்ள வேண்டிய உறவு முறையைப் பின்னுவதற்குப் பயன்படுவதில்லை. அவனுடைய அண்டையி லுள்ளவர்களே ப்பற்றிக்கூட அவன் கவலேப்பட வேண்டியதில்லை , பட்டுப் பூச்சி கூட்டிலுள் அடைப்பட்டிருப்பது போல அவன் தன்னைச் சுற்றியே தன் செயல்களைப் படைத்துக் கொள்கிருன். வெறும் யந்திரமாகத் தன்னை ஆக்கிக்கொள்பவன், தனியணுய், பிறர் துணை பற்றவனுய் கண்பர்கள் இல்லாதவனுய் இருக்க வேண்டியதுதான். ஒரு காங்கிரஸ் உறுப்பினர் ஆாற்புப் பணியில் ஈடுபட்டிருக்கும்பொழுது, தம்முடைய நாடு பொருளாதார வளத்தில் நீச்சல் அடிப்பதாகக் கனவு காணலாம் ; ஆனல் அத்தகைய கனவுக்கு வேறு தூண்டல்கள் இருக்க வேண்டும்.