பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/341

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.30 அனைத்துலக மனிதனே நோக்கி கின்றனர். இந்த ஒரு நிகழ்ச்சியில் மட்டும் அவர்கள் சரியாக்க் கூறிவிட்டனர். மிகப் பழங்காலத்தில், என்னிடமிருந்த குழந்தைத் தனத்தின் நிழல், மறுபடியும் என்னிடம் தலைக் காட்டிற்று ; பிற குழந்தைகளின் வாழ்வில் என்னுடைய குழந்தைத் தன்மை மறுபடி பும் புத்துயிர் பெற்று வாழ விரும்பியது. கிடைககக் கட்டிய பொருள் களைக் கொண்டு, வழக்கமாகப் பயன்படும் கருவிகள், குறிப்பிட்ட அளவுகள், நிலையான மதிப்புக்கள் ஆகியவை இல்லாமல், இழக்கப் பட்ட சுவர்க்கத்தை மீட்டும் தயாரிக்க விரும்பியது. பழங்கால இந்தியக் கவிஞகிைய காளிதாசனை’ இது என் நினைவுக்குக் கொண்டு வருகிறது. காளிதாசன் பிறந்த ஊரை அறிஞர்கள் மகிழ்ச்சி அடையக்கூடிய முறையில் அறிய வாய்ப்பு ஒன்றுமில்லை. எனவே இதில் முடிவிலாத தர்க்கத்திற்கு இட முண்டு. என்னுடைய புலமை ஆழமானது அன்று ; எனினும் அவன் அழகிய காஷ்மீரத்தில் பிறந்தான் என்று எங்கோ படித்ததாக கினேவு. அதிலிருந்து அவன் எங்குப் பிறந்தான் என்பது பற்றிய ஆராய்ச்சியையே படிக்காமல் விட்டு விட்டேன். ஏனென்ருல், வேறு யாரேனும் ஒருவர், அவன் வேறு ஓர் ஊரில்தான் பிறந்தான் என்று இதேபோல நிறைவைத் தரக்கட்டிய முறையில் கூறி விடுவாரோ என்ற அச்சத்தால்தான் படிக்கவில்லை. காளிதாசன் காஷ்மீரத்தில் பிறப்பதுதான் சரியானது. கல்கத்தாவிற் பிறந்த காரணத்தால் நான் அவனைக் கண்டு பொருமை அடைகிறேன். என்ருலும், உளப் பகுப்பு இயல் ஏமாற்றமடைய வேண்டிய தில்லை; ஏனென்ருல், காஷ்மீரத்தில் பிறந்த காளிதாசன் சம வெளிக்குத் தேசப் பிரஷ்டஞ் செய்யப்பட்டான். முன்னர் இருந்த மகிழ்ச்சி தரும் பொருள்களே ' கினைப்பதாகிய துன்ப இசையையே மேக தூதம் ' தன்னுள் கிறைத்துக் கொண்டிருக்' கிறது. இந்தக் கவிதையில், காதலனுடைய கற்பனை, குன்ருத அழகுடைய சுவர்க்கத்தில் வாழும் காதலியைத் தேடிச் செல்கையில் மலே, அருவி, காடு ஆகிய ஒவ்வொன்றின் அழகையும் தங்கி, கண்டு, இன்புற்றுச் செல்கிறது. அந்தக் கற்பனை, ஜூன் மாதத்திய மழை கிறைந்த மேகத்தை வரவேற்கும் கிராமப் பெண்களின் நன்றி நிறைந்த பெரிய கண்களைக் கண்டது. ஆல மரத்தின் அடியில் கிராமத்தைச் சேர்ந்த முதியவன் ஒருவன், வெள்ளே மனம் படைத்தவர்கள், துயரத்திலும் இன் பத்திலும் பாடும் காதற் கவிதை ஒன்றைப் பாடியதையும் அக் கற்பனை கேட்டு ரசித்தது. கல் மனம் படைத்த நகரத்தில் வாழும் கைதி, மனத்தில் ஏற்படும்