பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/343

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.32 அனைத்துலக மனிதனே நோக்கி மனிதர்கள், ஒருமைப்பட்ட மனத்துடன் எங்கும் கிறைந்த பொருளுடன் ஒன்றி வாழ்கின்றனர். ’’’ அவர்கள் மேற்கொண்ட கொள்கை வெறும் எதிர்மறைக் கொள்கையான துறவுக் கொள்கை பன்று. வள மிகுந்த உஜ்ஜயினி நகரத்தில், புகழ் வாய்த்த விக்ரமாதித்தன் காலத்தில் வாழ்ந்த காளிதாசன், உலகாதயப் பொருள்களாலும் அவற்றின் ஓயாது தூண்டுதல்களாலும், அமுக்கப்பெற்று அவஸ்தைப்பட்ட மன முடையவனுய், தபோவனக் காட்சிகளில் மனத்தைச் செலுத்தி ஒளி, வாழ்வு, சுதந்திரம் ஆகியவை கிறைந்த மன உலகில் வாழத் தொடங்கினன். . . . ஆன்மீகத் தேசப் பிரஷ்டத்தை அனுபவித்து, அதன் துன்பங் காரணமாக, நவீன இந்தியாவில் வாழும் கவிஞன் ஒருவன் இத் தகைய காட்சியைப் பெற்ருன் என்ருல் அது காளிதாசன வேண்டுமென்றே நகல் செய்யும் நோக்கத்தால் அன்று; இவை இரண்டும் எதிர்பாராத நிலையில் ஒன்ருக அடைந்தன. காளிதாக னுடைய காலத்தில்கூட மக்கள் காடுகளில் குடியேறி வாழும் தபோ வன வாழ்க்கையைப் பெரிதும் நம்பினர். அவ்வளவு பிற்காலத்திற் கடடக் காட்டில் வாழும் சமுதாயங்கள் இருந்தன என்றே நம்ப வேண்டியுள்ளது. இந்தச் சமுதாயத்தினர், கொஞ்சங் கொஞ்சமாகத் தற்கொலை செய்துகொள்ளும் நோக்கமுடைய துறவிகளல்லர்; ஆளுல் தம் வாழ்க்கையின் உட்பொருளே ஆராயும் கோக்கமுடைய வர்கள். தபோவனத்தைப்பற்றிக் காளிதாசன் பாடியவுடன், அதைக் கேட்டவர்களின் உயிருள்ள நம்பிக்கைகளே, அப்பாடல் பற்றிக் கொண்டது. ஆல்ை இன்று தபோவனத்தின் கருத்துக்கள் உண்மை இழந்து பொய்யாய்க் கனவாய்ச் சென்று மறைந்து விட்டன; வெறும் பழங் கதைகளாகி விட்டன. அவைகள், எனவே இன்று எழும் கவீனக் கவிதைகளில் அவை வெறும் * இலக்கிய மாகவே காட்சியளிக்கும். மேலும், நவீன காலத்தில், தபோ வனக் கருத்தை, இக்கால வாழ்க்கையோடு பொருக்தும் முறை யில் மாற்றியமைக்காவிட்டால் அது காலத்தோடு பொருக்தாத தாய்த் தனித்து கிற்கும். அதனுல்தான் இன்றையக் கவிஞன் இக் காலத்துக்குப் பொருந்தும் மொழியில் கவிதை புனேய வேண்டி யுள்ளது. ஆனல், அந்த வரலாற்றைக் கொஞ்சம் விரிவாகக் கடற வேண்டும்.