பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/350

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிஞன் நிறுவிய பள்ளி 3.39 டைய அறிவின் துணை கொண்டு இயற்கையுடன் ஒன்றல்தன்மை பெற்றதையே பாராட்டுகிறேன். இதுவே மேனுட்டார் மேற் கொண்டுள்ள வீரத் துணிகரச் செயலாகும் , அச் செயலே பூமி யிடத்து அவர்கள் அன்பு செய்யுமாறு செய்வது. எ ன் இளமைக் காலத்தில், ஐரோப்பாவில் பிரின்டிசி யிலிருந்து ' கலே நகரத்துக்கு இரயில் மூலம் செல்ல நேர்ந்தது. மேளுட்டு மானிடன் என்ற காதலன் பல்லாண்டுகளாக அன்பு செய்ததன் பயனுக அந்தக் கண்டம் ஒளியுடன் விளங்கியதை ஆர்வத்துடன் கண்டு கொண்டே சென்றேன். அந்தக் கண்டத்தை வென்று, தனதாக்கி, அவளுடைய மனத்தைத் திறக்கச் செய்து அவள் கருணையைப் பூரணமாகப் பெற்று விட்டான் அவன். கீழை நாட்டுப் பக்தன் ஒருவன் அவனுடைய மன உலகில் சஞ்சரித்துப் பெறும் அனுபவத்தை, அந்த ஆன்ம விசாரணையில் காணும் அனைத் துலக ஆன்மாவைத் தொண்டு செய்யும் மனப்பான்மையுடன் இணைக்க வேண்டும் எனப் பெரிதும் விரும்பினேன். ஒருநாள் காலே நேரத்தில் வங்காளத்தில் ஒரு கிராமத்தில் என் பூந்தொட்டியிலிருந்த பூக்களை வெளியே எடுத்து எறிந்தேன். ஒரு பிச்சைக்காரப் பெண்மணி அங்த வாடிய மலர்களைத் தன் புடவைத் தலைப்பில் ஏந்திக் கொண்டு எல்லையற்ற பரிவுடன் தன் முகத்தை அக் காய்ந்த மலர்களில் புதைத்துக் கொண்டு உள்ளத்தில் நிறைந்துள்ள அன்பே !’ என அரற்றினுள். இந்த மலர்களின் வாடிய புறத் தோற்றத்தைக் கிழித்துக் கொண்டு அவற்றின் கித்தி யத்துவத்தைக் கண்டு அதில் தன் காதலனுடைய ஸ்பரிசத்தைக் காணும் தீட்சண்யம் படைந்திருந்தன அவளுடைய கண்கள். இவை அனைத்தும் இருந்துங்கூட வழிபடும் ஆற்றலை அவள் பெற்றி ருக்கவில்லை. மேனுட்டாரைப் போல நேரடியாக ஆண்டவனே வழி படும் ஆற்றலை, பூமிதேவி மலர்களே மலர்வித்து புழுதியில் கட்ட அழகைப் பரப்ப உதவும் ஆற்றலே அவள் பெறவில்லை. கிழக்கும் மேற்கும், மேரியும் மாத்தாவும் சந்தித்து, சத்திய தரிசனத்தைப் பூரணமாக்க முடியாது என்று கூறுவதை நான் கம்ப மறுக்கிறேன். நம்முடைய லெளகீக வறுமை, காலத்தின் பகைமை ஆகியவற்றை யும் எதிர்த்துக் கொண்டு அந்த விடிவு காலத்தை நோக்கிப் பொறுமையுடன் காத்துக் கொண்டிருக்கிறேன். மனிதனும் இயற்கையும் அன்பால் மட்டும் அல்லாமல் நேரடித் தொடர்பாலுங்கட்ட ஒன்றுபடும் கிலேயைத் தடையில்லாமல் கற்பிக் கக் கூடிய ஒரு நிறுவனத்தை கினைக்கும்பொழுது, ராபின்சன்