பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/353

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

342 அனைத்துலக மனிதனை நோக்கி உள்ள மனம், உடல் ஆகியவற்றின் எல்லாப் பகுதிகளையும் தூண்டுதல் செய்து வளர்க்க வேண்டும் என்பதையும் அவ்ர் விரும்பினர். இந்தக் கருத்தை நடைமுறையில் கொண்டு செலுத்து வதற்குரிய சுதந்திரத்தைப் பெற வேண்டி, சில அனதைக் குழந்தை களையும், வேறு பள்ளிக்கூடங்களில் படிக்க வசதியற்ற குழந்தை களேயுங் கொண்டே எங்கள் பணியைத் தொடங்கினுேம். தொடங்கிய சில காலத்திலேயே, ஆக்க வேலையில் ஈடுபட் டுள்ள மனங்கள் மிக விரைவாக ஆற்றலைப் பெற்று, அறிவுத் துறையில் இந்த ஆற்றல் வெளிப்படுத்த வழி தேடும் முறையில், அதிகப்படியான பணிகளையும் மேற்கொண்டன என்பதை அறிக் தோம். இந்தப் பிள்ளைகளின் மனங்கள் வெகு விரைவில் மிகவும் கர்மை பெற்றன. ஆங்கிலம் அவர்கள் பாடத் திட்டத்தில் இடம் பெருவிட்டாலும் ஒரு சிறு நிகழ்ச்சியின் மூலம் அதனைக் கற்றுக் கொள்வதால் ஏற்படும் நன்மையைக் குழந்தைகள் அறிந்து கொண் டார்கள். ஒரு சில கடிதங்களைத் தபாலில் சேர்க்கும்பொழுது அவர்கட்கு இந்த எண்ணம் தோன்றிற்று. உறைகளின் மேல் ஏற்கெனவே வங்காளி மொழியில் எழுதப்பெற்ற விலாசங்களை அஞ்சல் அலுவலகத் தலைவர் மறுபடியும் ஆங்கிலத்தில் எழுதினர். உடனே அவர்கள் தம் ஆசிரியரிடத்தில் சென்று அதிகப்படியான ஒரு மணி நேரத்தில் தமக்கு ஆங்கிலம் கற்றுத் தரும்படிவேண்டினர். அவசரப்பட்ட தங்கள் வேண்டுதலே நினைத்து அவர்கள் என்றுமே வருந்த நேரிடவில்லை. என்ருலும் எனக்கு ஆங்கிலம் கற்பித்த ஆசிரியர் எங்கள் வீட்டிற்கு வருவதற்காகச் சந்து முன யில் திரும்பியதைப் பார்த்தவுடன் என் மனத்தில் எவ்வளவு தீய எண்ணங்கள் தோன்றின. என்பதை யான் இன்றும் மறக்க முடிய வில்லை. இந்தப் பிள்ளைகட்கு விடுமுறை காலம் என்பது அர்த்தமற்ற தாகி விட்டது. அவர்களுடைய படிப்பு எவ்வளவு கஷ்டமாக இருப் பினும், கடமையாக ஆக்கப்படவில்லை. அப் படிப்பில் சமைய லறை வேலே, காய்கறித் தோட்ட வேலை, கெசவ வேலை, சிறிய பழுது பார்க்கும் வேலே ஆகிய விடுமுறை காலப் பணிகள் சேர்ந்தே இருக் தமையின் பள்ளிப் படிப்பை அவர்கள் செய்து திர வேண்டிய கடமையாகக் கருதவில்லை. அவர்களுடைய வகுப்பு அறையில் செய்யப்படும் வேலையும் அன்ருட வேலையும் வேறுபிரிக்கப்படாமல், அன்ருட வாழ்வில் இவை இரண்டும் ஒன்ருகவேஆகிவிட்டமையின் அந்த வேலை, தானே அவர்களைக் கொண்டுசெலுத்தியது.