பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/359

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34& அனைத்துலக மனிதனை நோக்கி இயல்பில் அமைந்துள்ள சமுதாய இயல்பு தூண்டப்பெற்றது. பூமித் தாயின் அழைப்பின் பேரில் மனிதர்கள் ஒன்ரு யமர்ந்து விரும் துண்னும் பொழுது அவர்க்ள் கொண்ட பொது உணவின் பயனுக, தனிப்பட்ட அவர்களுடைய வாழ்வில் சகோதரத்துவ அடிப் படையைக் கண்டர்ர்கள். ஒன்று சேர்வதில் வசதி மட்டுமல்லாமல், திருப்தியும் இருப் பதை உணர்ந்தனர் அவர்கள். அதன் பொருட்டாகத் தனி மனிதன் துன்பத்தையும், மரணத்தையுங்கட்டப் பொறுத்துக் கொள்ளத் தயாரான்ை. பூமிதேவி நம் கண்களுக்கு விருந்தளிக்கும் முறையிலும், மனத்தை நிறைவிக்கும் முறையிலும் நமக்கு உண வளிக்கிருள். வானத்தில் ஒரு மூலையிலிருந்து மற்ருெரு மூலைக்குப் பரந்து கிடக்கின்ற பொன் வண்ணம், வயலில் முற்றி விளைந்து பொன் நிறத்துடன் இருக்கும் பயிருடன் போட்டி இடுகிறது. இந்த அழகு மனிதன் தன் உணவை மட்டும் சிந்திக்காமல், விழா இன்பங் காணவும் உதவுகிறது. . பூமியின் உக்கிராண அறையில் நம் பசிக்கேற்ற உணவுடன் இன்பமாகிய தேனும் கிறைந்துள்ளது. நிறைவின் தேவதையாகிய இலக்குமி அழகுடன் கருணையும் உடையவள். உண்டால் பயன் தரும் சத்துப் பொருளுடன் வடிவம், சுவை, மணம் ஆகியவற்ருலும் பழம் கம்மைக் கவர்கிறது. பூமியின் பழங்கள் அழகாயிருப்பது போல மனிதனுடைய கூட்டுறவும் அழகாயிருக்கிறது. தனிமையில் நாம் உண்ணும் உணவு ஊட்டத்தைத் தரும் , ஆளுல் கூட்டத் துடன் கலந்து உண்ணும் உணவு ஊட்டத்துடன் அன்பையுங் தரும். அத்தகைய விருந்தில் பாத்திரங்கள் அழகுடனும், பரிமாறல் கெளரவத்துடனும், கறிகள் சுவையுடனும் இருக்கும். மனிதனுடைய எந்த உபசரிப்பு இயல்பின் மேல் சமுதாயம் கிறுவப்பெற்றுள்ளதோ, அந்த உபசரிப்பு இயல் வறுமை நசுக்கு கிறது. அதனுல்தான் பூமியின் உணவு அறைகளின் பக்கத்திலேயே கிராமங்கள் தோன்றி வளர்ந்தன. மனிதனிடம் உள்ள கித்தியத் துவம் அவனுடைய மறு ஐக்கியத்தின் மூலங்தான் வெளிப்படு கிறது. அவனுடைய கல் லொழுக்கம், அவன் இலக்கியம், இசை, அவன் கலை, அவன் கொண்டாடும் பல சடங்குகள் ஆகியவையே இந்த வெளிப்பாடுகள். இவற்றின் மூலமாகத்தான் அவன் தன் னுடைய ஆழத்தை அறிந்து, நிறைவின் குறிக்கோள் ஆகிய வற்றையும் உணரத் தொடங்கினன்.