பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/363

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

353 அனைத்துலக மனிதனை நோக்கி உண்மையை முழு வடிவுடன் தராவிட்டால் அவனுடைய இயல்பையே அது மறுப்பதாகும் என்று கூறுகிருேம். இவ்வாறு, மனிதனுக்கு உண்மை கிடைக்காமற் செய்வதன் பயணுகவே அவனிடம் நோய்களும், கிராசையும் தோன்றுகின்றன. தொழிற்சாலை பல கேடுகளுக்குக் காரண்மாக இருக்கலாம்; என்ருலும் காம் அதனே முற்றிலும் ஒதுக்கி விடுவதற்கில்லை. நம் முடைய முக்கிய ஆற்றலில் யந்திரமும் ஓர் உறுப்பாகும். கொள்ளே யடித்தன என்பதற்காக நம்முடைய கைகளை வெட்டிவிடுவதால் எப்பயனும் ஏற்பட்ாது ; அதற்கெதிராக, அக் குற்றத்தைக் களைய வேண்டும். கொண்டியாக ஆக்கிக் கொள்வதன் மூலமே நம்மைச் சீர்திருத்திக் கொள்ள முடியும் என்று கூறுவது கோழை களின் புத்திமதியாகும். மனிதனிடம் உள்ள சக்திகள் அனைத்தும் வளர்ச்சியையும், விரிவையும் எதிர்நோக்கி இருக்கின்றன. மிகப் பழைய காலத்திலிருந்தே மனிதன் கருவிகள் செய்ய முயன்றிருக் கிருன். இயற்கையின் ஏதாவது ஓர் இரகஸ்யத்தை அவன் அறிந்த வுடன், ஏதாவது ஓர் இயந்திரத்தின் மூலம் அந்த இரகஸ்யத்தைத் தனதாக்கிக் கொள்ள முயன்றிருக்கிருன். இந்த முறையில்தான் மனிதனுடைய நாகரிகம் வளர்ந்து வந்துள்ளது. - மனிதன் என்றைக்குக் கலப்பையைச் செய்து பூமியின் சத்தை வெளிக் கொணர்ந்தானே, அன்றே அவனுடைய வளர்ச்சிப் பாதையிலிருந்த முதல் தடை நீக்கப்பெற்றது. அவனுடைய உணவு கிடைப்பதற்குரிய வழியை இது காட்டியதோ டல்லாமல் அவனுடைய மனத்தின் ஆழத்தில் ஒரு பகுதியையும் ஒளிபெறச் செய்தது. முதன் முதலில் அவன் செய்த இராட்டையும், தறியும் அவனுட்ைய கிர்வாணத்தை மூடியதுடன், அவனிடமுள்ள அழ குணர்ச்சியையும் தூண்டி விட்டன. அத்துடன் இந்த அழ குணர்ச்சி அவன் வாழ்வின் பெரும் பகுதியை ஆக்கிரமித்துக் கொண்டது. இன்று அவனுடைய உடல் மூடப்பட்டதுடன் மனமும் உடை உடுத்துக் கொண்டுள்ளது. மனிதருடைய இராஜ்யம் இந்த இரண்டு உடைகளையுமே பொறுத்திருக்கிறது. எந்த ஒரு சக்சியாசியாவது வெளியுலகத்துடன் வைக்கப் பெற்றுள்ள இக்த வாணிகத்தைக் கட்டுப்படுத்த வேண்டுமென்று விரும்பினால் அவன் முதலில் மனிதனுடைய இரண்டு கைகளையுங் தான் குற்றஞ் சாட்டவேண்டும். அதீத அளவில் செல்லும் துறவி இந்த அளவுக்கும் சென்று விடுகிருன். தான் இந்த உலகைத் துறந்து விட்டதையும் விடுதலையைப் பெற்று விட்டதையும, வலி