பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/365

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.54 அனைத்துலக மனிதனை நோக்கி றனர். காய்ந்து வறண்ட குழிகள், விளையாத நிலங்கள், என்றும் அணையா நம் சுடுகாடுகள் ஆகிய அனைத்திலிருந்தும் நாங்கள் தோற்றுவிட்டோம்” என்ற ஒரே ஒலந்தான் கேட்கப்படுகிறது. இந்த யுகத்திற்குச் சக்தியைக் கொடுக்கக்க, டிய விஞ்ஞானத்தை நாம் பெற்றிருநதால்தான் இனிவாவது வெல்லக் கட்டும்; நாம் பிழைக்கவும் கூடும். - செல்வம் ஒரே அளவில் பங்கிடப்படாமையால் ஏற்படும் ஏற்றத் தாழ்வுகள் ஒரு குறுகிய எல்லேயில்தான் நற்பயன்விளைவிக்க முடியும். ஓங்கி வளர்ந்த மலைகள் ஓயாத தடைகளே எழுப்புகின்ற காட்டில் பெரிய நாகரிகம் எதுவும் தோன்றி வளர முடியாது; ஏனெனில் இயல்பான போக்குவரத்தை அம் மலைகள் தடை செய் கின்றன. மாபெரும் சொத்துக்களும், ஆடம்பர வாழ்வும் உயர்ந்த மலைகளைப் போலப் பிரிக்கும் தன்மையுடைய குறுக்குச் சுவர்களாக அமைந்துவிடுகின்றன. கல்லாலும் சுண்ணும்பாலும் ஆகிய சுவர் களைக் காட்டிலும் மோசமான சமுதாயப் பிரிவினையை உண்டாக்கும் இச் சுவர்கள். - - சொத்துரிமைக் கொள்கையை ஒழித்து விடுவதால் இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காணமுடியும் என்று கம்புகின்றனர் சிலர். ஆளுல் தனி மனிதன் சொத்துரிமை எண்ணத்தை மனித மனத்தில் உண்டாக்கிய தூண்டுதல்கள், மனித இயல்பில் புதைந்து கிடக் கின்றன. அதிகாரம் இருந்தால், தனிச் சொத்துரிமையைப் போக்கி விடலாம் எனினும், மனித இயல்பை மாற்ற முடியாது. சொத்து என்பது நம்முடைய ஆளுமையை வெளியிடும் ஊடுகிலேப் பொருளாகும் (Medium). ஆளுமையின் எதிர்மறைத் தன்மையைக் கவனித்தால் ஒரு மனிதனே மற்ருெரு மனிதனி லிருந்து பிரிக்கும் எல்லேயை அங்குக் காணலாம். ஒரு சிலரிடத் தில் இந்தத் தனித் தன்மை அதிகம் வலுப் பேத்ருல் அவர்களைத் தன்னலக்காரர்கள் என்று கூறுகிருேம். இக் எதிர்மறைத் தன்மைக்கு எதிரான உடன்பாட்டுத் தன்மைதான் மனிதர்கள் |ன் மற்றவர் கலந்து உறவாட இடக் க.க கிதுை. நம்முடைய தனித் தன்மை தன்னலத்தில் கொண்டுவிடுகிறது என்ற காரணத் தால், அதினேக் கொன்றுவிட முயன்ருல், மானிட உறவு என்பதே அர்த்தமற்ற தாகிவிடும். அதற்குப் பதிலாக அதனே வளரவிட்டால், இயல்பிலேயே ஆக்க சக்தி உடையதாகலின் அது தனக்கேற்ற ஓர் உலகை ஆக்கிக் கொள்ளும். பல சந்தர்ப்பங்களில், பல மனிதர்கள் அவர்கட்கேயுரிய உலகை உண்டாக்கிக் கொள்ளச் ●@cm、5'