பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/367

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

356 அனைத்துலக மனிதனை நோக்கி என்ற தடையை உடைத்துக்கொண்டு வெளிப்படுமானல் அதுவும் காட்டுத் தீப்போல, சமுதாயத்தையே அழித்து விடுகிறது. இதன் பயனுக விளைவது முழு அழிவுதான். ஆதியிலிருந்தே சமுதாய விரோதியாக வுள்ள உணர்ச்சிகளைக் கட்டுப்பாட்டுக் குள்ளடக்கி வைக்க வேண்டு மென்ப்தற்குத்தான் மனிதனுக்கு ஆன்மீகப் பயிற்சி அளிக்கப் பெற்று வருகிறது. - - நம்முடைய வயல்களில் சில வகைப் பூச்சிகள் உள்ளன. அவை செய்யும் அழிவைக் காட்டிலும் உழவர்கட்குத் தேவையான பொருள்களே வயலில்விட்டுச் செல்கின்றன ஆகலின் அப்பூச்சிகளை அழித்து விடுவதால் பயன் ஒன்றும் இல்லை. வெகு விரைவில் தன் இனத்தைப் பன் மடங்காகப் பெருக்கிக் கொள்ளும் பூச்சி இனம் கம் பயிர்களைச் சாடினுல், அதை ஒரு பெரிய விபத்தாகவே கருதி அழிக்க முயலவேண்டும். மனித சமுதாயத்தில் சாதாரணச் சூழ் நிலையில், பல்வேறு காரணங்களால் பொருள்கள் வீணடிக்கப்படு கின்றன ; என்ருலும் காம் அவற்றைப் பற்றிக் கவலைப்படாமல் இருக்க முடியும். என்ருலும் நம்முடைய சமுதாய வாழ்விலும் அதனுடைய ஆதாரத்திலும் இன்று ஏற்பட்டுள்ள நிலை மிகப் பெரிய ஆபத்தாகும் ; ஏனெனில் அது குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் ஏற்படவில்லை. அது காயசண்டிகையின் யானைப் பசிபோன்ற தொற்று கோயாகும். நாகரிகப் பகுதி முழுவதிலும் அது பற்றி யுள்ளது. இன்பங்களே அனுபவிக்க நம்மால் எவ்வளவு செலவு செய்யக் கூடுமோ அந்த அளவுக்குக் கவலை யில்லாமல் செலவு செய்வதில் தவறில்லை என்று கருதுகிருேம். பணக்காரணுக உள்ள கம் அண்டை வீட்டுக்காரன் செலவு செய்கின்ற அளவுக்கு, நாமும் செலவு செய்ய முடியாவிட்டால் அதற்காக வெட்கப்படுகிருேம். கெளரவம் என்ற கொடுங்கோன்மை கம்மை அழிவுப் பாதையில் அழைத்துச் செல்கிறது. - வசதி, செளகரியம் என்பவை பற்றியே ஓயாது பேசப்படு கிறது. வீணுகும் பகுதியை நோக்கும்போது, செய்யப்படும் செல வுக்குக் கிடைக்கின் பயன் மிகவும் குறைந்துவிடுகிறது. உற்பத் திப் பெருக்கத்தை அறிவிக்கத் தொண்டை கிழியக் கடவப்படும் விளம்பரம், பொருளும் உயிர்ச் சக்தியும் அளவு மீறி வீணுவதைக் குறிக்கிறது. நாகரிகம் என்பதே மிகப் பெரிய இரை போடும் நிறுவனமாக அமைந்து விட்டது. சாப்பாட்டுராமர்களாக உள்ள பெரிய