பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/368

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நகரமும் கிராமமும் ვ 57 கூட்டத்துக்கு ஓயாது விருந்திடுவதே அதன் தொழிலாகிவிட்டது. ஒரு சிலரிடம் மட்டும் இருப்பின் மன்னிக்கப்படகூடிய பெருங்குடிப் பழக்கம் பெருங் கூட்டத்திற்கும் பரவி விட்டது. இதன் பயனுக ஏற்பட்ட அனைத் துலகப் பேராசைதான் இன்று மானிட சமுதாயம் முழுவதிலும் அரசியலிலும், வாணிகத்திலும் நிறைந்து கிடக்கும் அற்பத்தனம், பொய், கொடுமை, ஆகியவற்றிற்குக் காரணம். இயற் கைக்கு மாருன பசியுடைய நாகரிகம், எண்ணற்ற அப்பாவிகளைப் புசிக்கவேண்டி யுள்ளது. இந்த அப்பாவிகளைத் தேடுகையில் உலகின் எந்தப் பகுதியில் மானிட இரைச்சி மலிவாகக் கிடக் கிறதோ அந்த இடம் தேர்ந்தெடுக்கப்படுகிறது. அர்த்தமற்ற ஆடம்பரத்தையும் எண்ணற்ற கெளரவக் குப்பைகளையும் தருவதற் காக ஆசியா, ஆப்ரிக்கா ஆகிய இடங்களில் வாழும் எண்ணற்ற மக்களின் இன்பம் பலியிடப்படுகிறது. - . பேராசை, கடிவாளம் இல்லாமல் வளருகின்ற சமுதாயத்தில், பேராசை மக்களால் வளர்க்கப்பெற்றுப்போற்றப்படுகின்ற சமு தாயத்தில், எந்த ஒன்றை மேட்ைடார் ஜன நாயகம் என்று கூறு கிருர்களோ அது உண்மையாக இருக்க முடியாது. அத்தகைய சூழ்நிலையில், தனிப்பட்ட மனிதர்கள் தங்கள் சுய இலாபத்திற்காகப் பொது நிறுவனங்களைப் பிடித்துக் கொள்வதற்கு ஓயாமல் போராடுவார்கள். அத்தகைய இடங்களில் ஜன நாயகம் என்பது, புத்திசாலிகளையும், பணக்காரர்களையும் இன்பத்திற்காக ஊர்வலமாக ஏற்றிச் செல்லும் யானை போன்றது. அந்தச் சூழ்நிலையில், பொதுமக்களின் கருத்துக்களே வெளி யிடும் சாதனங்களேயும், ஆட்சி என்னும் கருவியையும், நேரடி யாகவோ மறைமுகமாகவோ செல்வந்தர்கள் சிலர் பிடித்துக் கொள்வார்கள். பழங் காலத்தில் ஊசியின் காதில் நுழைய முடியாத ஒட்டகத்திற்கே இவர்கள் ஒப்புமை கடறப்பட்டார்கள். இங்கு ஊசியின் காது என்பது இலட்சிய ராஜ்யத்தின் வாயிற் படியையேயாகும். ஆன்மீக விடுதலே பற்றிட தங்கள் நம்பிக்கையை எடுத்துச் சொல்பவர்களே அந்தச் சமுதாயம் கருணை இன்றியும் கொடுமையாகவும் கடக்துகிறது. அத்தகைய சமுதாயத்தில், அந்த மக்கள் தாங்களாகக் கடறிக்கொள்ளும் முன்னேற்றம் என்ற போதையில் மயங்கி புள்ளார்கள். அந்த முன்னேற்றத்தை விலக்கு வாங்க நாகரிகத்தைக்கூட விற்று விடுகிருர்கள். உணவைவிட மதுவை அதிகம் விரும்பும் மனிதனைப் போன்றவர்கள் இவர்கள், -