பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/371

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

360 - அனைத்துலக மனிதனை நோக்கி தேவைகள் இயல்பானவையாகவும் இருந்தபொழுது, தன்னல உணர்ச்சிகள் கட்டுப்பாட்டுக் குள்ளடங்கி இருந்தபொழுது, இத் தகைய ஒரு முறை இயல்பானதாகவும், இன்பங் தருவதாகவும் இருந்தது. குடும்ப நிதி ஆதாரங்கள் அனைவருக்கும் போதுமான தாக இருந்தது ; தனி உறுப்பினர் யாரும் கியாய்மற்ற முறையில் எதற்கும் உரிமை கொண்டாடவில்லே. ஒரு தனி உறுப்பின்ர் தம் தேவைக்கு அதிகமாகப் பேராசைப்பட்டுக் கூச்சலிடும் நிலை யில், இத்தகைய குழு நிலைத்து வாழ முடியாது. பொது நன்மைக்கு எதிராகத் தனி வசதிகள்பற்றிய ஆசை வேலை செய்யும்பொழுது குடும்ப முறை நன்கு கிலேபெற முடியாது. அந்த நிலையில் சகோதரர்கள் பிரிந்து செல்லவும், பகைவர்களாகக் கூட ஆகவும் நேரிடும். கவிஞர் காட்டே'யின் காலத்திய ஜர்மெனியை, அரசியல்வாதி பிஸ்மார்க்கின் காலத்தில் வாழ்ந்த ஜர்மானியர் வறுமையுடைய நாடு எனக் கூறினர். பிளேட்டோவால், அல்லது அசோகன்? வாழ்க்கையால் ஒளிதரப்பெற்ற நாகரிகத்தின் தரத்தை நவீன காலத் தில் வாழும் கர்வம் பொருந்திய மக்கள் ஒருவேளை எள்ளி நகை யாடக் கூடும். கவீன காலத்தில் வாழும் இளைஞர்கள் அதிக அச்சியந்திரங்களைப் பெற்று, மனத்தைக் குறைவாகப் பெற்றுள்ள மையின், அக் காலத்தில் வாழ்ந்தவர்களே நோக்கி இரக்கங் காட்ட வேண்டுமா ? பூமியைக் காட்டிலும் சந்திரன் வடிவால் சிறியதாக இருத்த லின், பூமியைக் காட்டிலும் முன்னரே சந்திரனில் உயிர்கள் தோன்றி விட்டன என்று நான் கற்பனை செய்துகொள்ள விரும்புவ துண்டு. ஒரு காலத்தில் சந்திரனில்கட்ட, தீப விழாவும், கிற, பேதங்களும், இசையும், இயக்கமும் இருந்து வந்தன. அதனுடைய உக்கிராண அறையில் எப்பொழுதும் உணவுப் பொருள்கள் நிறைங் திருந்தன. பின்னர்ச் சுற்றுப்புறத்தையே அழித்து விழுங்கும். ஓர் இனம் அங்குத் தோன்றிற்று. அந்த இனம், விலங் குணர்ச்சி யையும் ஓரளவு அறிவையும் பெற்றிருந்தது. வெறும் கூட்டல் முறை, நிறைவை உண்டாக்காது என்ற உண்மையை அவ்ர்கள் கற்பனை செய்து பார்க்க முடியாதவர்களா யிருந்தனர். அன்றியும் மிக அதிகமாகச் சேகரித்து விடுவது மட்டும் இன்பத்தைக் கொணராது என்பதையும், வேகமான இயக்கம் மட்டும் முன்னேற் றத்தைக் கொணராது என்பதையும், ஏதாவது ஒரு நிறைவுள்ள இலட்சியத்தை நோக்கிச் செல்லும்போதுதான் முன்னேற்றம்