பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/372

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நகரமும் கிராமமும் 361 என்பதற்கே ஒரு பொருள் இருக்கும் என்பதையும் அவர்கள் கற்பனை செய்து பார்க்கத் தவறி விட்டனர். அவர்கள் அடித்த கொள்ளை, இயற்கை செய்யும் மறு வழங்கலக்கூடத் தாண்டி விட்டது. அங்கு வாழ்ந்த கொள்ளே இலாபம் அடிக்கின்றவர்கள் இயற்கைக்கு மாறுபட்ட முறையில் அவர்களுடைய தேவைகளே அதிகப்படுத்தினர். இயற்கையின் மூலப்பொருள் பண்டசாலேயி லிருந்து கொள்ளே யடித்ததுடன், இயற்கையின் ஆதாரங்களேயும் கருனை யற்ற முறையில் அவர்கள் சுரண்டலாயினர். உள்ள பொருளே எல்லாம் கொள்ளே கொண்ட பிறகு, யாருக்கு அதிகப் பங்கு என்பது பற்றி அவர்கள் தமக்குள் சண்டை இட்டுக் கொண்டனர். இந்தச் சண்டையில் ஈடுபட்டிருந்த அவர்கள் ஒழுக்க நீதிகளைக் கண்டு எள்ளி நகையாடினர். தங்களுடைய ஆசையைத் திருப்தி செய்து கொள்வதில் விட்டுக் கொடாமல் இருப்பதே தங்கள் இன உயர்வைக் காட்டுவதாகும் என நம்பினர். தண்ணிரைக் காலி செய்து, மரங்களே வெட்டிச் சாய்த்து, அந்தக் கோளை மொட்டை யடித்துப் பள்ளங்கள் நிறைந்த பாலைவன மாக்கினர். அந்தக் கோளின் உட்பகுதியை எல்லாம் ஒருவனுடைய சட்டைப் பையில் உள்ள உயர்ந்தவற்றைக் கவர்வதுபோலக் கொள்ளையடித்தனர். பழம் தன்னுள் வைத்துக் காத்த பூச்சிகள் அந்தப் பழத்தின் சதையை எல்லாம் தின்று தீர்த்ததுபோல, சந்திரனும் இறுதியில் உயிரற்ற வெறும் ஓடாக, தாம் பிறந்த உலகத்தையே தின்று தீர்த்த பேய்ப் பிராணிகள் அனைத்தின் சுடுகாடாக விளங்கிற்று. كمي என்னுடைய கற்பனையில் உதித்த சந்திர மண்டல மக்கள், இன்று இப் பூமியில் உள்ள மக்கள் எவ்வாறு கடந்து கொள்கிரும் களோ அப்படியே கடந்து கொள்கின்றனர். பூமாதேவி தன் குழந்தைகளின் பசியைத் தணிக்க வேண்டிய உணவை வைத்திருக் கிருள் தப்பித் தவறி எங்கேனும் மிகுதியான தேவை ஏற்பட்டால் அதைப் போக்கவும் ஒரளவு அதிகமாக வைத்திருக்கிருள். ஆளுல் திடீரென்று உலகம் முழுவதும் - தோன்றியுள்ள, செல்கிங் கொடுத்துக் கெட்டுப்போன, பிள்ளைகளின் அணுவசியமான தேவை கட்குத் தரக்கூடிய அளவில் அவள் Gు ఎమజు, மனிதன் தன் வாழ்க்கை வசதிகளில்மட்டு மல்லாமல், வாழ் வில்கட்ட அஸ்திவாரம் வரைத் தோண்டிக் கொண்டே போகிருன். அவனுடைய உடம்பையே தின்கின்ற நிலைக்குச் சென்று விட்டான். கண்ணை மூடிக் கொண்டு பொருள்களே வீணடிக்கும் நிலையைக் கிராமங்களிற் காணலாம். வாழ்வின் ஒளியை மங்கச் செய்து,