பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/373

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

კ 62 - அனைத்துலக மனிதனை நோக்கி உயிருடன் இருப்பதன் இன்பம் குறைக்கப்பட்டு, சமுதாயத் கூட்டுறவுத் தொடர்பு கிராமங்களில்தான் துண்டிக்கப்படுகிறது. சமுதாயத்தில் இரத்த ஓட்டங் குறைந்துள்ள இந்த உறுப்புக் களுக்கு, நல்ல இரத்த ஒட்டம் கிடைக்குமாறு செய்வதே கம்முடைய கடமையாக இருக்க வேண்டும். மேலும் செல்வத்தையும் அறிவை பும் கிராமங்கட்குக் கொணர வேண்டும். வாழ்வதற்குத் தேவை யான இட வசதியும், உழைப்பதற்கும் ஒய்வெடுப்பதற்கும் மகிழ் வத்ற்கும் தேவையான நேரத்தையும், சுய மதிப்பைத் தரக்கூடிய கெளரவத்தையும் உலகின் பிற பகுதிகளில் வாழும் மனிதர்களுடன் உறவு கொண்டாடக்கூடிய முறையில் பரிவையும் தருவதுடன், எப்பொழுதும் இரண்டாவது ஸ்தானத்தையே அவர்கட்குத் தரும் பழக்கத்தையும் ஒழிக்க வேண்டும். ஓடைகள், ஏரிகள், கடல்கள் ஆகியவை தங்கள் எல்லைக்குள் கீரை வைத்துக் கொள்வதற்காக மட்டும் இருக்கவில்லை. மேகமாக மாறக்கூடிய நீராவியையும் அவை அனுப்புகின்றன. இதன் பயனுகத் தண்ணீர் பரவலாக வழங்கப்படுகிறது. செல்வத்தையும் அறிவையும் குவித்து வைக்க வேண்டிய கடமை நகரங்கட்கு உண்டு. ஆளுல் அவற்றைத் தங்கட்காக மட்டும் இவ்வாறு குவிக்கக் கூடாது. அவை பாசனத்துக்குரிய மைய இடங்களாக இருத்தல் வேண்டும். பரவலாக வழங்குவதற்காகவே அவற்றைச் சேகரிக்க வேண்டும். அவை தங்களே மட்டும் பெருக்கிக் கொள் ளாமல் சமுதாயம் முழுவதையும் வளப்படுத்த வேண்டும். ഋ|ങ്ങഖ விளக்குக் கம்பங்களைப் போன்று கின்று தங்களுக்குக் கீழே மட்டும் ஒளியைப் பரப்பாமல், அந்த எல்லேக்கு அப்பாலும் ஒளி பரவச் செய்ய வேண்டும். . நகரமும், கிராமமும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளும் முறையில் உறவு கொள்ள வேண்டுமாயின், கூட்டுறவு மனப்பான் மையும், தன்னலத் தியாகமும் சமுதாயத்தின் உயிருள்ள குறிக் கோளாக இருக்கின்ற வரையில்தான் முடியும். ஏதாவது ஓர் ஆசை இந்தக் குறிக்கோளைத் தோற்கடித்து விடுமானல், சுயநல உணர்ச்சி மிஞ்சி விடுமானுல், ஒரு பெரிய பிளவு ஏற்பட்டு விரிந்து கொண்டே செல்லும். அக் கிலேயில் நகரம் சுரண்டும் பொருளாகவும், கிராமம் சுரண்டப்படும் பொருளாகவும் ஆகி விடும். விசுவ பாரதியின் சார்பில் இந்தியாவில் கிராமப் புனருத்தாரண வேலையைத் தொடங்கியுள்ளோம். இனத் தற்கொலையின்