பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/375

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

sea அனைத்துலக மனிதனே நோக்கி தொரு காயம் ஏற்பட்டு, காளாவட்டத்தில், முழு உடம்பும் இரத்த கஷ்டத்தால் இறக்க நேரிடும். II நான் கூற வேண்டியவற்றை எல்லாம் முன்னரே பல முறை கூறியுள்ளேன் ; இனி ஒன்றும் எஞ்ச வில்லை. அப்பொழுது எனக்கு வலிமை இருந்தது; என் எண்ண ஓட்டமும் தடைப்படுத்தப்பட வில்லை. முதுமையும், உடல் கலக்குறைவும் இப்பொழுது என் வலிமையைப் பாதித்து விட்டன; எனவே என்னிடம் அதிகம் ஒன்றும் எதிர்ப்பார்க்கக் கூடாது. மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு யான் இங்கிருக்கிறேன். உங்களில் சிலரை அடிக்கடிக் காண்கிறேன். இப்பொழுது நான் உங்கட்குத் தரக்கட்டியதெல்லாம் என்னைத்தான். இந்த வீட்டை* முதலில் வாங்கியபொழுது இதற்கெனத் தனித் திட்டம் ஒன்றும் வைத்திருக்கவில்லை. சாந்தி நிகேதன் மக்கள் கூட்டத்திலிருந்து வெகுதூரம் விலகி இருக்கிறது. அதில் கற்கின்ற மாணவர்கள் தேர்வில் வெற்றி பெற உதவுவதுடன் கல்வித் துறையினர் கல்வி என்ற பெயரில் தரும் பங்கீட்டுப் பொருளேவிட ஓரளவு அதிக மாகவும் சாந்தி நிகேதன் தருகிறது என்று மட்டும் நினைத்ததுண்டு. ஆளுல் மற்ருேர் எண்ணமும் என் மனத்தில் ஓடியது. ஷலியாத், பாட்டிசார் ஆகிய கிராமங்களில் வசிக்கத் தொடங்கியவுடன் தான் கிராம வாழ்க்கையுடன் எனக்கு நேரடித் தொடர்பு ஏற்பட்டது. அப்பொழுது நான் ஜமீன்தார் தொழில் பார்த்து வந்தேன். ரயத்துகள் தங்கள் இன்பம், துன்பம், குற்றச் சாட்டுக் கள், வேண்டுதல்கள் ஆகியவற்றை என்னிடம் கொண்டு வந்ததால் கிராமத்தை ஓரளவு கண்டு கொள்ள முடிந்தது. ஒரு புறத்தில், புறக் காட்சிகளாகிய ஆறுகள், புல் வெளிகள், கெல் வயல்கள், மரத்தடியில் உள் மண் குடிசைகள் ஆகியவை காட்சியளித்தன. மற்ருெரு புறம் மக்களின் அக வாழ்க்கை காட்சி யளித்தது. என் கடமைகளை நிறைவேற்றுகையில் அவர்களுடைய குறைகளே அறிய முடிந்தது. ககரத்தில் பிறந்த நகரப் பூச்சி நான். என் முன்னேர்கள் கல்கத்தாவில் குடியேறிய ஆதிக் குடிகளாவர். என் இளமைப் பருவத்தில் கிராம வாசனையே பட்டதில்லை. . எங்களுடைய சொத்துக்களைக் கண்காணிக்கும் கிலே ஏற்பட்டவுடன் அக் கடமை.