பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/376

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நகரமும் கிராமமும் 365 தொல்லைதரும் என்று அஞ்சினேன். கணக்கு வைத்தல், வரி வசூல் செய்தல், பற்று வரவு ஆகிய அலுவல்களில் நான் பழகவில்லை : எனவே என் அறியாமை என் மனத்தில் பெரும் பாரமாக இருந்தது. கணக்கு வழக்குகளில் கட்டுண்டு கிடக்கும் கான் மனிதனுகவும், இயல்பாகவும் இருக்க முடியுமென்று கம்பவில்லே. அலுவலில் புகுந்தவுடன் அது என்ன ஆட்கொண்டு விட்டது. ஏதாவது, ஒரு பொறுப்பை மேற்கொண்டு விட்டால் அதிலேயே மூழ்கி, என் சக்தி முழுவதையும் அதில் செலவிடுவது என்னு-ை" இயல்பாகும். ஒரு முறை ஆசிரியனுக இருக்க நேர்ந்தபொழுது' என் முழு ஆர்வத்தையும் காட்ட நேர்ந்தமையின் அதில் அதிக இன்பங் கண்டேன். ஜமீந்தார் வேலையில் உள்ள பல சிக்கல் களேத் தீர்க்கக் கங்கணம் கட்டிக் கொண்டமையின் நான் கண்டு பிடித்த பல புதிய வழிகள்பற்றி என்னைப் புகழ்ந்தனர். உண்மை யைக் கூறுமிடத்து அக்கம் பக்கத்திலுள்ள கிலச் சுவான்தார்கள் என் முறையைப் பழகிக் கொள்ள, தங்கள் குமாஸ்தாக்களே என்னிடம் அனுப்பினர். என் பணியாளர்களில் கொஞ்சம் வயதானவர்கள் அஞ்சிப் போய்விட்டனர். ஒரு வகையிலும் நான் புரிந்து கொள்ள முடியாத படி, அவர்கள் பதிவேடுகளே வைத்திருந்தனர். அவர்களாக எவற் றைத் தெரிவிக்க வேண்டும் என்று கருதுகிருர்களோ அவற்றைத் தவிர மற்றவற்றை நான் அறிந்து கொள்ளக் கூடாது என்பதே அவர்களுடைய நோக்கமாகும். இந்த முறையை மாற்றினுல் குழப்பம் உண்டாகும் என்று அவர்கள் கூறிஞர்கள். வழக்கு நேர்ந்தால் இப் புதிய முறைப் பதிவேடுகளே நீதி மன்றத்தார் ஐயப் படுவார்கள் என்றும் எடுத்துக் காட்டினர். என்ருலும் அடியி லிருந்து நுனிவரை இதனை மாற்றியமைக்க வேண்டும் என்று நான் பிடிவாதம் பிடித்ததால் ஏற்பட்ட பயனும் திருப்தியாகவே இருந்தது. ரயத்துகள் உள்:ன்னேக் காண வந்தனர். இரவு பகல் எந்த நேரத்திலும் என் கதவுகள் அவர்கட்குத் திறந்திருந்தன. சில நாட்களில், நாள் முழுவதும் அவர்களுடைய குறைகளைக் கேட்பதி லேயே செலவழிந்தது ; சாப்பாட்டைக்கூட கழுவவி. வேண்டி இருந்தது. இந்த வேலைகள் அனைத்தையும் உற்சாகத்துடனும் மகிழ்ச்சியுடனும் செய்தேன். குழந்தைப் பருவத்திலிருந்து தனித்தே வாழ்ந்த நான் கிராமத்தில் முதல் தடவையாக அனுபவம் பெற்றேன். புதிய வழிகளை உண்டாக்குவதில் திருப்தியும், இன்ப மும் இருக்கக் கண்டேன்.