பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/377

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

366 அனைத்துலக மனிதனே நோக்கி கிராம வாழ்க்கையின்" ஒவ்வொரு பகுதியையும் நுணுக்க மாகக் காண விரும்பினேன். என்னுடைய கடமைகள் காரணமாக ஆறு, கால்வாய், நீர் வழிகள் மூலம் நீண்ட தூரங்கட்குச் சென்று வந்தேன். இந்த வழியில் வாழ்வின் மாறும் காட்சிகளைக் காண ஒரு வாய்ப்பு ஏற்பட்டது. கிராம மக்களின் அன்ருட அலுவல்களும், அந்த அலுவல்கள் மாறி மாறி வருவதும் என்னே வியப்பில் ஆழ்த்தின. நகரத்தில் வாழ்ந்து பழகிய கான் கிராம அழகின் இருதய ஸ்தானத்தில் இறங்கி அந்த அழகால் நிரப்பப்பெற்றேன். பின்னர் மெள்ள மெள்ள அந்த மக்களின் வறுமையும், துன்பமும் என் கண் முன் விரிந்தன; அவர்கட்கு ஏதாவது செய்ய வேண்டு மென விரும்பினேன். நான் ஒரு ஜமீந்தாராக இருப்பதிலும், பணமே குறியாகவும், வருவாயே கருத்தாகவும் இருப்பதிலும் வெட்கமடைக் தேன். அந்த உணர்வு ஏற்பட்டதிலிருந்து, மக்களின் மனத்தை விழிப்படையச் செய்து அவர்கள் பொறுப்பை ஏற்றுக்கொள்ளு மாறு செய்யும் பணியை மேற்கொண்டேன். வெளியில் இருந்து கொண்டு கிராமத்தாருக்கு உதவ முயல் வது பயன்படாது. அவர்களிடமுள்ள உயிரின் ஒரு பொறியைத் தூண்டுவதே என் பிரச்னையாக இருந்தது. அவர்கள் தங்களை தாங்களே மதித்துக் கொள்ளாமையின் அவர்கட்கு உதவுவதே முடியாத காரியமாக இருந்தது. காங்கள் நாய்கள்; சவுக்கு ஒன்று தான் எங்களைச் சரியான வழியில் செலுத்தும் என்று அவர்களே கடறுவதுண்டு. - ஒரு நாள் அண்டைக் கிராமம் ஒன்றில் நெருப்புப் பிடித்துக் கொண்டது. அந்த மக்கள் அப்படியே அதிர்ச்சி யடைந்து செய்வ தறியாது கின்று விட்டனர். பக்கத்திலுள்ள கிராமத்திலிருந்து முஸல்மான்கள் ஓடி வந்து நெருப்பை அணைத்தனர். தண்ணீர் இன்மையால், நெருப்பை அணைக்கக் கொட்டகைகளைத் தகர்த்து எறிய வேண்டி இருந்தது. குடிசைக்காரர்கள் வெளியேற மறுத்தமை யின் அவர்களே அடிதது அப்புறப் படுத்திய பிறகே அந்தக் குடிசை களேத் தகர்த்து எறிய முடிந்தது. கன்மை புரிவதற்குக்கட்ட ஹிம்சை வழியை மேற்கொள்ள வேண்டி இருந்தது; இதன்பிறகு அவர்கள் என்னிடம் வந்து ' எங்கள் குடிசைகளைப் பிரித்தது எவ்வளவு அதிர்ஷ்டம்; அதனுல்தான் காங்கள் பிழைத்தோம் ' என்று கூறிச் சந்தோஷப் பட்டனர். அவர்களே அடித்து விலக்கியது பற்றிக்கட்ட அவர்கள் மகிழ்ச்சி யடைந்தனர். ஆலுைம் அவர்களுடைய பணிந்து போகும் இந்த இயல்பைக் கண்டு நான் வெட்கப்பட்டேன்.