பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/379

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

368 அனைத்துலக மனிதனே நோக்கி கணக்கு, சுவர்க்கத்தில் வைக்கப்படுமென்றும், பெரிய கெளரவத் தைச் சம்பாதித்த காரணத்தால், ஏழாவது சுவர்க்கத்திற்கு போய் விடுவேன் என்றும் கிராம மக்களுக்குக் கொஞ்சம் தண்ணிர் மட்டுமே கிடைக்குமென்றும் அவர்கள் கருதியதாகத் தெரிகிறது. - - அந்தத் திட்டத்தையே நான் கைவிட்டு விட்டேன். மற்ருேர் உதாரணங் தருகிறேன். எங்கள் எஸ்டேட்டிலிருந்து குஷிட்டியா வரையில் ஒரு சாலையை கிர்மாணித்தேன். அந்தச் சாலையின் பக்கத்தில் குடி இருப்பவர்களே நோக்கி இந்தச் சாலே யைப் பாதுகாப்பது உங்கள் பொறுப்பு. அதில் ஏற்படும் குண்டு குழிகளே நீங்கள் ஒன்றுகட்டிப் பழுது பார்த்துக் கொள்ளுங்கள் ’’ என்று கூறினேன். உண்மையைக் கூறினுல் அவர்கள் மாட்டு வண்டி அதிகம் போய் வந்ததால்தான் அந்தச் சாலை மழைக்காலத் தில் பழுதடைந்தது. உடனே அவர்கள் குஷிடியாவிலிருந்த பணக்காரர்கள் வந்து போவதற்குரிய சாலையை காங்கள் பழுது பார்க்க வேண்டுமா?’ என்று கூறிவிட்டனர். தங்களுடைய உழைப்பில் ஏற்பட்ட பயனை மற்றவர்களும் அனுபவிக்கிருர்கள் என்ற எண்ணத்தைக்கூட அவர்களால் பொறுக்க முடியவில்லை. இவ்வாறு நிகழ்வதைவிட அவர்கள் தொல்லைகளைக் கட்டப் பொறுத் துக் கொள்ளத் தயாராக இருந்தனர். . நம்முடைய கிராமங்களில் வாழும் ஏழை மக்கள் பல அவமரி யாதைகளைச் சகித்துக் கொண்டுள்ளனர்; அதிகாரமுள்ளவர்கள் பல இன்னல்களைப் புரிந்துள்ளனர் அவர்கட்கு. அதனெதிரில் அதிகாரமுள்ளவர்கள் எல்லாச் சமுதாய நல வேலைகளேயும் செய்ய வேண்டி இருந்தது. கொடுங் கோன்மை, தருமம் என்ற இந்த இரண்டின் இடைபட்டுக் கிராமவாசிகள் சுய மரியாதையையே இழந்து விட்டனர். தாங்கள் அனுபவிக்கும் துன்பங்கட்குச் சென்ற பிறவிகளில் செய்த பாபமே காரணம் என அவர்கள் எண்ணு கின்றனர். மேலும், கல்வாழ்வு வாழ்வதற்கு, தகுந்த அளவு நன்மைகள் புரிந்து மறு பிறப்பு எடுக்க வேண்டும் என்றும் கம்பு கின்றனர். துன்பத்திலிருந்து விடுதலையடைய வழியே இல்லை என்ற உறுதியான கம்பிக்கிை அவர்களே உதவியற்றவர்களாகச் செய்து விட்டது. - - ஒரு காலத்தில் கிராமத்தில் தண்ணிருங் கல்வியுங் கிடைக்கு மாறு செய்வது புகழ் பெறுங் காரியம் எனப் பணக்காரர்கள் கினைத் தனர். அவர்களுடைய நல்லெண்ணத்தினுல் கிராமங்கள் நன்கு வாழ்ந்தன. ஆணுல் அவர்கள் நகரங்களில் குடியேறியவுட்ன்