பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/380

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நகரமும் கிராமமும் 369 கிராமங்களில் தண்ணிர்ப் பஞ்சம் தலை விரித்தாடியது ; மலேரியாவும், காலராவும் பரவலாகப் புகுந்தன ; கிராமங்கள்தோறும் மகிழ்ச்சி ஊற்றுக்கள் வறண்டன. கம்முடைய கிராமங்களைப் போலச் சுவை யற்ற வாழ்வு வாழும் மக்களைப் பார்ப்பது கடினம். - இதனை-நீக்கும் வழியே எனக்குத் தென்படவில்லே. பன்னூறு ஆண்டுகளாக வலு விழந்து வாழ்ந்து அதன் பயனுகச் சுய முயற்சி என்பதையே மறந்து கிற்கும் மக்களுக்கு உதவிசெய்வ தென்பதே இயலாத காரியம். இருந்தாலும் வேலையைத் தொடங்க வேண்டும் என்று கினைத்தேன். அந்த நாட்களில் எனக்கு உதவியாக இருந்தவர் காளி மோகன் ஒருவர்தாம். காலையும் மாலேயும் வெப்பு நோயால் அவதிப்படுவார் அவர்.' என்னுடைய மருந்துப் பெட்டி மூலம் அவருக்கு நானே மருத்துவஞ் செய்தேன். இந்த மருத்துவ முறை யில் அவரைப் பிழைக்க வைக்க முடியும் என்று நான் நம்பவே r. எதனையாவது கொடுப்பதானுல் மரியாதையுடன் கொடு என்று சாத்திரம் பேசுகிறது. இந்த முறையில்தான் நான் வேலை செய்யத் தொடங்கினேன். என்னுடைய அலுவல் அறையிலிருந்து கொண்டே குடியானவர்கள் கலப்பைகள், எருதுகளுடன் வயலுக்குச் செல்வதைக் கவனித்து வந்துள்ளேன். அவர்களுடைய நிலங்கள் சிறு சிறு துண்டுகளாக இருந்தன ; அவரவர்களுடைய துண்டுகளே அவரவர்கள் உழுதனர். கிலங்கள் இவ்வாறு இருப்பு தால் அவர்கள் செலவழிக்கும் சக்தி வீணுயிற்று. ஆகவே அவர் களை வரவழைத்து உங்கள் நிலங்கள் அனைத்தையும் ஒன்ருகச் சேர்த்து உழவு செய்யுங்கள். அனேவரிடத்திலும் உள்ள வசதி களேயும், வலிமையையும் ஒன்று சேருங்கள். அப்பொழுது நீங்கள் டிராக்டர்களைக் கூடப் பயன்படுத்த முடியும். நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து உழைத்தால் தனிப்பட்டவர்களுடைய வயல்களில் ஏற்படும் சிறிய மாறுதல்கள் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை. எவ்வளவு இலாபம் கிடைத்தாலும் நீங்கள் அதனைப் பங்கிட்டுக் கொள்ளலாம். கிராமத்தில் உற்பத்தியாகும் பொருள்களே ஒர் இடத்தில் சேகரித்து வைத்தால் நீங்கள் வியாபாரிகளிடமிருந்து நல்ல விலை பெற முடியும்' என்று கூறினேன். இதைக் கேட்டுக் கொண்டிருந்த அவர்கள் இந்தக் கருத்து கன்ருகத்தான் இருக் கிறது. ஆனல் நடைமுறையில் இதனை எவ்வாறு கிறைவேற்று வது?’ என்று கேட்டனர். அதற்குரிய அறிவும் பயிற்சியும் எனக்கு இருந்திருக்குமாயின் * நான் அக்தப் பொறுப்பை ஏற்றுக் g לל