பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/385

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

374 அனைத்துலக மனிதனை நோக்கி ஒவ்வொரு மனிதனும் கணக்கற்ற பேர்களின் எண்ணங்களைப் பங்கிட்டுக்கொள்ள முடியும். இதுமட்டு மன்று. உயிருடன் வாழ்பவர்கள் மனத்தை மட்டும் இந்த வரி வடிவ மொழி பிணிக்கவில்லை. மிகப் பழங் காலத்தில் வாழ்ந்தவர் மனத்தையுங்கட்டப் பிணித்து, இடையிலுள்ள காலம் என்னும் தடையை உடைத்துவிடுகிறது; எண்ண்ங்களின் இடையே ஏற்பட்ட இந்தத் தொடர்புதான் நாகரிகம் என்பதையே உண்டாக்கிற்று. எந்த ஓர் ஒற்றுமை நிலையில், ஒவ்வொரு தனி மனிதனுடைய வலிமையும் அனைவருடைய ஆற்றலுக்கும் உதவி செய்கிறதோ, எந்த நிலையில் அனைவருடைய ஆற்றலும் தனி மனி தனுக்குக் காவலே நல்குகிறதோ அந்த கிலேயே நாகரிகம் என்று கூற்ப்பெறும். வெறுக்கத் தகுந்த நம்முடைய வறுமையின் பின்னர், நாமே நம்மை ஒதுக்கிவைத்துக் கொண்டுள்ளோம் என்பதும், நம்முடைய "மிகப் பெரிய பாரத்தை நாமே தாங்கிக்கொள்கிருேம் என்பதும் அறியக்கூடிய உண்மைகள். ஐரோப்பாவில் நீராவி யந்திரம் வந்த பொழுது பல கைத்தொழிலாளர் வேலையிலிருந்து,நீக்கப்பட்டனர். மனிதனுடைய கைகள் எவ்வாறு யந்திர சக்தியின்முன் போட்டியிட முடியும்? ஆளுல் ஒரு கெருக்கடியான கிலேயில் ஐரோப்பிய மக்கள் ஒருவரைப்பற்றி மற்றவர் சிந்திக்கின்றனர். எங்கே நாகரிகம் வலிமையுடைய ஆற்றலாக இருக்கிதோ அங்கே சகோதர உணர்ச் சியும் வ்லுவாக இருக்கிறது. மக்களினுடைய ஒற்றுமை முயற்சி கள் அவர்களுடைய ஆற்றலாகவும், முதலாகவும் இருத்தல் கூடும் என்ற எண்ணம் தோன்றலாயிற்று. பலருடைய எண்ணங்கள் ஒற்றுமைப்பட்டமையின் நாகரிகம் பெற்ற மனிதன் நல்ல வளர்ச் சியைப் பெற்ருன். அதேபோலப் பலருடைய ஒற்றுமையான முயற்சி புதிய வேகத்தைப் பெறக்கட்டும். மேலும் மேலும் வளத் தைத் தருகின்ற இந்தக் கூட்டுறவு ஐரோப்பாவில் மேலும் வளரு கின்ற பாதையாகிவிட்டது. இதைவிடச் சிறந்ததொரு பதையை உலகில் வேறு எங்கும் கான் காணவில்லை. W - | -- * - - - ஒவ்வொரு முறை:பும் நான் ஒரு சிறிய கிராமத்தைச் செ للفل نة في காணவேண்டி இருக்கிறது. ஒரு தாழ்வாரத்தில் கின்றுகொண்டு பல மைல்கள் நீண்டு கிடக்கும் வயல்களைக் காண்கிறேன். இந்த நிலங்களைப் பல குடியானவர்கள் புயிர் செய்கின்றனர். சிலர் இரண்டு பிகாக்களையும், சிலர் நான்கையும், சிலர் பத்துப் பிகாக் களையும் வைத்திருக்கின்றனர். முதன் முதலில் கண்ணிற்ப்டும்