பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/386

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூட்டுறவு 375 மெய்ம்மை என்னவென்ருல், ஒரு சில குடியானவர்களே தேவை யான எருதுகளை வைத்திருக்கின்றனர். மற்றுஞ் சிலர் மிகக் குறைவாகவே வைத்துள்ளனர். காலா காலத்திலோ அன்றிக் காலங் தாமதித்தோ உழவு தொடங்கப்படலாம்; அது உழவு ஆதா ரங்களைப் பொறுத்து இருக்கிறது, இந்தத் துண்டு கிலங்களின் எல்லேகள் வளைந்து வளைந்து செல்வதால், உழவுச் சால் வளைந்து சென்று அதனுல் உழவு மாடுகளின் உழைப்பு வீணுகிவிடுகிறது. ஒவ்வோர் உழவனும் அந்த அந்தச் சிறிய நிலங்களை மட்டும் தன் னுடையது என்று கருதாமல், பக்கத்திலுள்ள பகுதிகளையும் சேர்த் துக்கொண்டு உழவு செய்தால் ஒரு சில கலப்பைகளும், உழவு மாடுகளுமே போதுமானதாக இருப்பதோடு, பயன் அற்ற உழைப் பையும் மிச்சம் செய்யலாம். அறுவடைக்குப் பிறகு குடியானவர் கள் தங்கள் தானியங்களை ஒன்ருகச் சேமித்து ஒன்ருக விற்ப தானுல் கிறைந்த அளவு சக்தியும் செலவும் மிஞ்சும். குறைந்த அளவு நேரத்தில் நிறைந்த அளவு வேலையைச் செய் பவனே வெற்றி பெறுகிருன். அதனுல்தான் மனிதர்கள் கருவி களைப் பயன்படுத்துகிருர்கள். இந்தக் கருவிகளைப் பயன்படுத்து வதால் இரண்டு கைகள் பத்து அல்லது இருபது கைகளுக்குச் சமமாகின்றன. மனிதன் தன்னுடைய உடல் வலிமையால் அல்லாமல் கருவிகளைப் பயன்படுத்துவதால்தான் உழவுத் தொழிலி லிருந்து சிறந்த பயனைப் பெறுகிறன். உழவில் மட்டுமல்லாமல், போக்கு வரத்து, மற்றும் நெசவு, எண்ணெய் ஆட்டுதல், சர்க்கரை காய்ச்சுதல் ஆகியவற்றிலும் கருவிகளே உதவுகின்றன. கலப்பை, தறி, மாட்டு வண்டி, குதிரை வண்டி, செக்கு ஆகியவை, தேவைப் பட்ட நேரத்தைக் குறைத்ததுடன், உற்பத்தியையும் பெருக்கி விட்டன. இவற்ருல்தான் முன்னேற்றம் சாத்திய மாயிற்று. இவை இல்லாவிடின் மனிதனை வாலில்லாக் குரங்கிலிருந்து வேறு பிரித்துக் காட்ட ஒன்றுமே இருந்திராது. நவீன காலத்தில் நீராவியாலும், மின் சாாத்தாலும் இயககப் படும் பெரிய யந்திரங்கள் வருகின்றவரை, மனிதன் தன் சிறிய கருவிகளேயே பயன்படுத்தி வந்தான். பெரிய யந்திரங்கள் கருவிகளைத் தோற்கடித்தன ; கருவி ஏந்திய கைகள் வெறுங் கைகளைத் தோற்கடித்தன. கம்முடைய உழவர்கள் கட்ட இவற்றைப்பற்றிச் சிந்திக்க வேண்டிய காலம் வந்துவிட்டது , சிந்திக்க மறுத்தால் அவர்கள் பிழைத்து வாழ முடியாது. இப்பொழுது வெறும் சித்தாந்தங்களைப்