பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/392

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ಕL®pa 3.81 களே முழுவதும் அனுபவிக்க வ்ேண்டி ஒவ்வொருவரும் மேலும் மேலும் பணத்தை நாடுகின்றனர். எங்காவது ஓரிடத்தில் இந்தப் போராட்டம் முடியும் என்று கினைப்பதுகூடப் பயனற்ற தாகி விடுகிறது. - - - , - - ே "சமுதாய வாழ்வில், என்று பேராசையும் அதிகார வணக்கமும் எல்லே கடந்து போகின்றனவோ அன்றே, மனிதன் மானிடத்தின் வளர்ச்சிக்கு உழைக்க முடியாமல் போகிறது. மனிதன் முழுத் தன்மை அடைய விரும்புவதை விட்டுவிட்டு அதிகாரத்தைப் பெற விரும்புகிருன், அத்தகைய சூழ்நிலையில் நகரம் முழு மதிப்பையும் அடைய, கிராமங்கள் ஒதுக்கப்படுகின்றன. எல்லாச் சந்தர்ப்பங் களும், எல்லா வசதிகளும், வாழ்க்கையை இன்பமாக அனுபவிக்கத் தேவைப்படுகின்ற அனைத்தும் நகரத்தில் குவிகின்றன. கிராமங்கள் உணவை உற்பத்தி செய்து தர மட்டும் உழைத்து உயிரைக் கையிற் பிடித்துக்கொண்டு வளர்கின்றன. சமுதாயம் ஒரு புறம் ஒளியும் மறு புறம் காரிருளும் பெற்று இரண்டாகப் பிரிக்கப்படுகிறது. இதே வகையில்தான் ஐரோப்பாவில் உள்ள நக்ர காகரிகம் மனித னுடைய உயிர்ச்சத்தைப் பிளந்து விடுகிறது. பழைய கிரேக்க நாடும் நகரங்களைச் சுற்றியே அமைந்திருந்தது. அதனுல் அங்குத் தலைவன் அடிமை என்ற பிரிவினை மீற முடியாததாக இருந்தது. ஆகவே மிகுந்த செல்வாக்குடன் சில காலம் வாழ்ந்த கிரேக்கம் ஒதுக்கப் பெற்று விட்டது. பழைய கால இத்தாலியுங் கூட நகர அடிப்படை யில் அமைந்து அதுவுஞ் சில காலம் அதிக அதிகாரத்தைச் செலுத் தியது. அதிகாரம் என்பது இயல்பாகவே சமுதாய எதிரி யாகலின் ஆண்டான் அடிமை என்ற வகுப்புப் பிரிவினையை உண்டாக்கி விடுகிறது. ஒரு சில யசமானர்கள் பெரும்பாலான அடிமைகளின் ஒட்டுண்ணி யாகின்றனர். இந்த ஒட்டுண்ணித்தனம் அவர்களு டைய மானிட இயல்பை அழித்து விடுகிறது. மேனுடுகள், தம்மிடத்தில்மட்டு மல்லாமல் உலக முழுவதிலும் ஒளி இடங்களையும், இருட் டிடங்களையும் உண்டாக்கி விட்டன. அவற்றினுடைய தேவைகள் மிகப்பெரிதாக வளர்ந்து விட்டமையின் அந்த நாட்டு எல்லைக்குள் கிடைக்கும் பொருள்களில் அவற்றைத் திருப்திப்படுத்த முடியவில்லை. பிரிட்டிஷ் மக்கள் நாகரிக வாழ்க்கை என்று கூறிக் கொள்வதை நிலைநிறுத்த வேண்டுமrயின், அதன் இன்றியமையாத தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டிய செல் வத்தைப் பெறுவதற்கு இந்தியாவை அவர்கள் பிடிக்குள் வைத் திருக்கவேண்டும். இந்தியாவை விட்டுவிட்டால் அவர்களுடைய