பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/393

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38.2 அனைத்துலக மனிதனை நோக்கி ஆடம்பர வாழ்வைக் குறைத்துக் கொள்ள நேரிடும். அவர்கள் அதிகாரத்தின் கருவிகளாகச் சில அடிமை மக்களே வைத்திருக்க வேண்டும். ஆகையால்தான் பிரிட்டிஷ் இனம் முழுவதும் இந்தியாவின் ஒட்டுண்ணிகளாக வாழ்கின்றது. ஆகவேதான் ஐரோப்பாவிலுள்ள பெரிய நாடுகள் அனைத்தும், ஆசியாவையும், ஆப்பிரிக்காவையும் தம்முள் பங்கிட்டுக்கொள்ள விரும்புகின்றன. இன்றேல்,இன்ப வேட்டை ஆடும் அவர்களுடைய நாகரிகம் அரைப் பட்டினி கிடக்க நேரிடும். - எல்லேயில்லாமல் இன்ப வேட்டை ஆடுவதற்குரிய ஆதாரங்களே அனைவருக்கும் சமமாகப் பிரிக்க இயலாது. ஒரு சிலர் ஏற்கனவே சேர்த்துள்ள தம் செல்வத்துடன் மேலும் சேர்ப்பதற்காக, பலரிடம் இருப்பதைப் பறிக்க வேண்டும். மேனுட்டு மக்கள் எதிரே காணப் படும் முக்கியமான பிரச்னை இதுதான். ஆளும் நாடுகட்கும் அடிமை நாடுகட்கும் இடையே யுள்ள அதே பிளவு, அவர்களுடைய பேராசை காரணமாக அவர்கள் நாட்டிலேயும்கூட, உடையவர்கள் இல்லாத வர்கள் இடையேயும் ஏற்பட்டுள்ளது. அனைத் துலக மானிட 'சமயத்திற்கு இத்தகைய முரண்பாடு பெருங் தீங்கை விளக்கும். எங்கெல்லாம் மனித ஒற்றுமை ஆபத்தில் இருக்கிறதோ, அங்கெல் லாம் ஒற்றுமையைக் குலைக்கும் சக்திகள் நேரிடையாகவும், மறை முகமாகவும் தோன்றத்தான் செய்யும், ஆண்டான், அடிமையை கேரிடையாகத் தாக்குகிருன். ஆணுல் ஆண்டானிடம் இருக்கும் நீதி உணர்ச்சியைப் போக்குதலின், அடிமை மறைமுகமாக ஆண் டானைத் தாக்குகிருன். இது ஒரு பெரிய ஆபத்தாகும். ஏனெனில் விலங்குகள் பசியால் மட்டும் மடிகின்றன; மனிதன் நீதி மனப் பான்மை இன்மையாலும் மடிகின்ருன். ஒரு கண் குருடான மான் ஒன்று எதிர்ப்புற மிருந்து வந்த அம்பை அறிய முடியாமையால் கொல்லப்பட்டதாக ஏசாப்பின் நீதிக் கதைகளில் படிக்கிருேம். மனிதன் தற்கால நாகரிகத்தில் முற்றிலும் லெளகீகமான பகுதியே குருட்டுப் பக்கமாகும். இன்றுள்ள ஐரோப்பாவில் அறிவைத் தேடும் முறையில் பலவகைப் பட்டதும் பரந்ததுமான ஒற்றுமையைக் காண்கிருேம் எனினும் செல்வத்தைத் தேடும் முறையில் கொடுமையான போட்டி இருந்து வருகிறது. ஐரோப்பாவில் உள்ள அறிவு விளக்கு ஒன்று கொளுத்தப் பெற்ற வுடன் ஆயிரக் கணக்கான விள்க்குகளை அதுவே கொளுத்தி அதன் பயனுக கவீன யுகம் முழுவதும் ஒளி பெறுகிறது. இம் முறையில் பிற கண்டங்களேவிட ஐரோப்பா சிறந்து விளங்குகிறது. அறிவை