பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பன்முறையும் கூறியுள்ளார். ஒருவன் பிற உயிர்கட்குச் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்ய ஏற்றுக் கொண்டால் ஒழிய அவன் வீடுபேற்றை அடைய முடியாது. உணர்ச்சிகளையும், அழகுணர்ச்சி களையும் அமிழ்த்த முயல்வது கொடுமையான எதிர்ச் செயல்களை உண்டாக்கி வாழ்வையே அழித்து விடும் அளவிற்குக் கூடக் கொண்டு செல்லலாம். வாழ்வின் இன்ப, துன்பம் இரண்டையும் ஏற்றுக் கொண்டு, அன்ருடக் கடமைகளே நிறைவேற்றுவதில்தான் நிறைவைக் காண வேண்டும். கம்முடைய பல்வேறு சக்திகளையும் வள்ர்ப்பதால்தான் ஒருங்கு இணைந்த ஆளுமையைப் பெற முடியும். தனி மனிதர்களில் பெரும்பான்மையானவர்கள் தம்முடைய தனி 'வாழ்வில் ஒன்றல் தன்மையைக் காணும்பொழுதுதான் சமுதாயம் உண்மையிலேயே வளர்ச்சி யடையும். ஆளுமையின் வளர்ச்சியில் தாகடர் இவ்வளவு ஆர்வங் கொண்டிருந்தமையின், சமயச் சடங்குகளின் தத்துவம் பற்றி அதிகக் கவலை கொண்டாரேயன்றி அதன் கிரியைகள் பற்றி மிகுதி ஆயும் கவலைப்படவில்லை. சமய வாழ்க்ைைகயில் சடங்குகள், உரிய இடத்தைப் பெற வேண்டும் என்ருலும், அவற்றின் பயன், நாம் கொண்டிருக்கும் நம்பிக்கையின் அளவையும் தரத்தையுமே பொறுத்திருக்கிறது என்று அவர் பல முறை வற்புறுத்திக் கூறி யுள்ளார். தலைவன் விருப்பமே நடைபெறும் என்ற கட்டுரையில் மனிதர்கள் சாத்திரங்களின் கருத்துக்களே விட்டு விட்டு வெறும் சடங்குகளை மேற்கொள்வதால், தம் ஆன்மாவையே இழந்து விடு கின்றனர் என்ற கருத்தை மிக அழகாகவும் ஆணித்தரமாகவும் கூறியுள்ளார். இக் கொள்கை பழைய மரபுகள், சம்பிரதாயங்கள், பொருளாதார, சமுதாய, அரசியல் விஷயங்கள் என்பவற்றிற்கும் பொருந்துவதோடு சமயத் துறைக்கும் மிகுதியும் பொருந்துகிறது. இந்த உலகில் எதுவுமே மாருமலிருந்ததில்லை. எனவே, சமய சம்பிர தாயங்களும், மாறியே தீரவேண்டும். பழங்காலத்தில் அல்லப் பொழுது ஏற்பட்ட ஆன்மiஅனுபவங்களே, இன்று சடங்குகள் சம்பிர தாயங்கள் ஆகியவற்றுள் அடக்க முயல்வது முரட்டு வழக்காகும். மூலத் தூண்டுதல் வலிமை இழந்தவுடன் வெறுஞ் சடங்கு அந்த இடத்தை அடைய முயல்கிறது. அத்தகைய சந்தர்ப்பங்களில் பழைய சடங்குகளே ஒழித்துப் புதியனவற்றைப் புதிய காலத்துக்கு ஏற்ப அமைக்க வேண்டும் என்று சமயத்தின் சாராம்சமே வேண்டி கிற்கிறது. உடனடியான ஆன்ம அனுபவத்தின் உன்மையைக் . ఊ్ము, சடங்கு, சம்பிரதாயங்களே உயர்த்திப் பேசுவது கட்டாது.